மாதுளை முதல் செவ்வாழை வரை... விந்தணுவை அதிகரிக்கும் 7 முக்கிய உணவுகள்!
விந்தணுவின் தரம் மற்றும் இயக்கத்தை மேம்படுத்துவதற்கு வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் ஒமேகா-3 போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது முக்கியம்.
விந்தணுவின் தரம் மற்றும் இயக்கத்தை மேம்படுத்துவதற்கு வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் ஒமேகா-3 போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது முக்கியம்.
டார்க் சாக்லேட், குறிப்பாக எல்-அர்ஜினைன் என்ற அமினோ அமிலத்தைக் கொண்டிருப்பது, விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை அதிகரிக்க உதவும். இது விந்தணுக்களின் இயக்கம் மற்றும் அளவை மேம்படுத்தவும், விந்தணுக்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
2/7
செவ்வாழைப்பழம்
செவ்வாழைப்பழம் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் சத்துக்கள் நிறைந்தது. குறிப்பாக, இதில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி விந்தணு உற்பத்தியை அதிகரிக்கின்றன. மேலும், செவ்வாழையில் உள்ள துத்தநாகம் ஆண்களின் புரோஸ்டேட் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது, ஆற்றல் அளவை அதிகரிக்கிறது, மற்றும் விந்தணு டிஎன்ஏ சேதத்தில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
3/7
பூண்டு
பூண்டு சாப்பிடுவது விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கவும், விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தவும் உதவும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பூண்டில் உள்ள அல்லிசின் என்ற கூறு, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு, விந்தணுக்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
Advertisment
4/7
மாதுளை
மாதுளையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கையை மேம்படுத்தவும், விந்தணுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மாதுளை உதவுகிறது. மேலும், மாதுளை செக்ஸ் டிரைவை அதிகரிக்கவும் உதவுகிறது.
5/7
வால்நட்ஸ்
வால்நட்ஸ் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்துவதற்கு உதவுகிறது. குறிப்பாக, வால்நட்ஸ் லிப்பிட் பெராக்சிடேஷனை (lipid peroxidation) குறைப்பதன் மூலம் விந்தணு செல்கள் சேதமறுவதிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. மேலும், வால்நட்ஸ், விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், விந்தணுக்களின் இயக்கம் மற்றும் உருவ அமைப்பை மேம்படுத்தவும் உதவுகிறது.
6/7
கீரை
கீரை, விந்தணு எண்ணிக்கை மற்றும் இயக்கத்தை அதிகரிக்க உதவும் ஒரு பயனுள்ள உணவு. கீரையில் ஃபோலேட், வைட்டமின் சி மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை விந்தணுவின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
Advertisment
Advertisements
7/7
ப்ரோக்கோலி
ப்ரோக்கோலி சாப்பிடுவது விந்தணு எண்ணிக்கை மற்றும் தரத்தை மேம்படுத்த உதவும் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் அதில் ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை விந்தணுக்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயன்விக்கு.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news