/indian-express-tamil/media/media_files/2025/02/07/PfggwurAiUJj11vVqrWR.jpg)
/indian-express-tamil/media/media_files/1hpJGyG5FRJHuFPrlybM.jpg)
சில சமயங்களில் ஒருவருடன் பேசும் போது நம் வாயிலிருந்து வெளிவரும் வாசனை காரணமாக, அந்த உரையாடலைத் தவிர்க்க வேண்டிய சூழல் ஏற்படலாம். இது அவர்களுக்கும், எதிரே உள்ளவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். அதாவது வாய் துர்நாற்றம் ஆனது ஒருவரது நம்பிக்கையையும் மற்றவர்களுடனான அவர்களத் தொடர்புகளையும் பாதிக்கிறது. இதில் வாய் துர்நாற்றத்தை சமாளிப்பது என்பது வாய் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வதைக் குறிக்கிறது.
/indian-express-tamil/media/media_files/9bHQ9lPh8on1o6vYhY84.jpg)
வாய் துர்நாற்றம் ஏற்பட முக்கிய காரணம் வாயில் பாக்டீரியாக்கள் குவிவதே ஆகும். இந்த பாக்டீரியாக்களின் காரணமாக, வாயில் துர்நாற்றம் வீசும் கந்தக கலவைகள் உருவாகலாம். இது வறண்ட வாய், வாய் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் உணவுகள், மோசமான வாய்வழி சுகாதாரம் போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. இந்த வாய் துர்நாற்றத்தை சரியான நேரத்தில் சரிசெய்யப்படாவிட்டால் அது பற்சிதைவு, ஈறு நோய் மற்றும் தொற்று நோய்கள் தொற்றுநோய்கள் போன்ற கடுமையான வாய்வழி சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
/indian-express-tamil/media/media_files/iZ6GaO1qrSs7MR8JRj5e.jpg)
வாயில் பாக்டீரியாக்கள் செழித்து வளரும் சமயத்தில் அவை, ஈறுகளில் பிளேக் உருவாக்கம் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தலாம். நாளடைவில் இது பற்களை ஆதரிக்கும் திசுக்கள் மற்றும் எலும்புகளை சேதப்படுத்துகிறது. எனவே நீண்ட கால வாய் ஆரோக்கியத்திற்கு, ஆரம்பத்திலேயே துர்நாற்றம் பிரச்சனையை எதிர்த்துப் போராடுவது அவசியமாகும்.
/indian-express-tamil/media/media_files/cyLhdHUeXtZqlFk34GOC.jpg)
உடலில் பல்வேறு பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது நீரிழப்பு ஆகும். இதில் வாய் துர்நாற்றமும் ஒன்று. வாய் துர்நாற்றத்தை எளிதில் தீர்க்க உதவும் வழிகளில் உள்ள ஒன்று நீரேற்றமாக இருப்பதாகும். ஏனெனில், வாய் துர்நாற்றம் ஏற்பட வறண்ட வாய் ஒரு பொதுவான காரணமாக அமைகிறது. இவ்வாறு நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிப்பது வாயை ஈரமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், நீரேற்றமாக இருப்பது உணவுத் துகள்களைக் கழுவுவதுடன், துர்நாற்றம் வீசும் பாக்டீரியாக்களின் செறிவைக் குறைக்கிறது. சரியான நீரேற்றத்துடன் வாய் ஆரோக்கியத்தைப் பராமரிக்க ஒரு நாளைக்கு குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/v0AwRd29uDDheocybtDE.jpg)
உப்பு நீரைக் கொண்டு வாயைக் கழுவுவதன் மூலம் வாய் துர்நாற்றத்தை எதிர்த்துப் போராடலாம். இது எளிதான மற்றும் பயனுள்ள தீர்வாக அமைகிறது. இதற்கு ஒரு கிளாஸ் அளவிலான நீரைக் கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும். இந்த வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் அளவிலான உப்பைச் சேர்த்துக் கொள்ளலாம். இந்த நீரை வாயில் ஊற்றி 30 விநாடிகள் வரை வாயைச் சுற்றிக் கழுவுவது பாக்டீரியாவை அகற்றவும், ஈறுகளில் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. உப்பு நீரில் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இந்த நீரைக் கொண்டு வாயைச் சுத்தம் செய்யும் போது, அது வாயை சுத்தமாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/06/10/0P9sO4BqJwYBKbAgKBmQ.jpg)
இந்த பிரச்னைக்கு மற்றொரு முக்கிய தீர்வு ஒன்று இருக்கிறது. எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து தினமும் காலையில் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும். இதனால் வயிறு சுத்தமாவதோடு அல்சர் நீங்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.