/indian-express-tamil/media/media_files/2025/05/06/HC6CXV4eMsXMIFXgTLf8.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/03/08/TDzuZVCaeAGGVQ3hhv0a.jpg)
பொதுவாக ஒருவருக்கு தோல் சம்பந்தமான பிரச்னைகள் இருக்கிற நிறைய பேர் தங்கள் ரத்தத்தையும் சுத்தம் பண்ணாமல், தோல் பிரச்னை சரியாகும் என்று நினைப்பது ரொம்ப தவறான விஷயம் என்று டாக்டர் ஷர்மிகா கூறுகிறார்.
/indian-express-tamil/media/media_files/2024/10/18/wJ7yYWJ7wjN5mtijkgKA.jpg)
தோல் பிரச்னை இருந்தால் ஏதாவது ஒரு மெடிசன் எடுத்துக்கொண்டு, அப்போதைக்கு ஒரு ஆயின்மெண்ட் போட்டு, எல்லாத்தையும் மறைத்து வைத்துவிட்டு, அதற்கு அப்புறம் அந்த மெடிசனையும் ஆயின்மெண்ட்டையும் நிறுத்தும்போது திருப்பி திருப்பி அந்த பிரச்னை வருவதைப் பார்ப்போம். அது நிரந்தரமாக சரியாவதற்கு ஒரு 2 ஜூஸ், சின்ன டிப்ஸ்களை டாக்டர் ஷர்மிகா கூறுகிறார்.
/indian-express-tamil/media/media_files/2024/11/05/Yi6NmRBa0B8vYzzRXaXw.jpg)
அதற்கு காலையில், உணவுக்கு முன் 200 மி.லி ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஜூஸ் குடிக்க வேண்டும். இந்த ஜூஸை ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த ஏ.பி.சி ஜூஸை கண்டிப்பாக குடிக்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/vfxqGcR0YlTxMJSrxAJ4.jpg)
அடுத்து, பெரிய நெல்லி ஜூஸ், பெரிய நெல்லிக்காயை குட்டிகுட்டியாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்து ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து, ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாலையில் 5 மணிக்கு குடியுங்கள்.
/indian-express-tamil/media/media_files/2024/11/24/VDhTWlUmFXYU3QAZCJXB.jpg)
வேப்பிலை, புதினா, கொத்தமல்லி கொஞ்சம் தண்ணீர், கொஞ்சம் எலுமிச்சை சாறு பிழிந்துவிட்டு கொஞ்சம் சால்ட், டேஸ்ட் வேண்டும் என்றால் கொஞ்சம் சேட் மசாலா என எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு அரைத்து அந்த ஜூஸையும் 100 மி.லி வாரத்திற்கு ஒருமுறை குடிக்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/08/XMClYE45FP03O1znNgsw.jpg)
இந்த ஜூஸ்களைக் குடித்து வந்தால் தோல் பிரச்னைகள் சரியாவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. தோல் பிரச்னைகள் இருப்பவர்கள் இந்த டிப்ஸ்களை முயற்சி செய்து 2 மாதங்களை மாற்றங்களைப் பாருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.