/indian-express-tamil/media/media_files/2025/06/08/cZMbCJbG2qiNdLWDKPlL.jpg)
/indian-express-tamil/media/media_files/2024/12/04/fATaEB22jmUAehxDmHck.jpg)
உங்களுடைய உடலில் பயோடின், புரதம், இரும்புச்சத்து அல்லது சிங்க் போன்ற ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருந்தால் நகங்கள் அடிக்கடி உடையலாம் அல்லது மெதுவாக வளரலாம். எனவே புரோட்டின் மற்றும் பயோடின் அதிகம் நிறைந்த முட்டைகள், ஃபோலேட் மற்றும் இரும்புச்சத்து அதிகம் காணப்படும் கீரை வகைகள், மெக்னீசியத்தின் சிறந்த மூலமான பாதாம் பருப்பு, ஒமேகா -3 கொழுப்பு அமிலம் மற்றும் புரதம் நிறைந்த வஞ்சிரம் மீன், பீட்டா கரோட்டின் அதிகம் காணப்படும் சர்க்கரைவள்ளி கிழங்குகள் போன்றவற்றை உங்களுடைய அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/05/27/yMoWKBflZjZicMNX5b7C.jpg)
உங்களுடைய சருமத்தை போலவே நகங்களுக்கும் நீர்ச்சத்து என்பது தேவைப்படுகிறது. எனவே நகப்படுக்கையில் தேங்காய் எண்ணெய், வைட்டமின் ஈ எண்ணெய் போன்றவற்றை தினமும் தடவுங்கள். கைகளை ஒவ்வொரு முறை கழுவியப் பிறகும் ஹேண்ட் க்ரீம் பயன்படுத்துங்கள். பாத்திரங்கள் கழுவும் போது அல்லது கெமிக்கல்களோடு தொடர்பு கொள்ளும் போது கை உறைகளை அணிந்து கொள்ளுங்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/06/08/7SGF961wPF9zafbKp2h9.jpg)
உங்களுடைய நக வளர்ச்சிக்கு தடையாக இருக்கக்கூடிய ஒரு சில பழக்கங்களை நீங்கள் கட்டாயமாக கைவிட வேண்டும். நகங்களை கடிப்பது, நகங்களை கருவியாக பயன்படுத்துவது, அதிக கெமிக்கல்கள் நிறைந்த நக பாலிஷ் மற்றும் நக பாலிஷ் ரிமூவர்களை பயன்படுத்துவது போன்றவை உங்களுடைய நகங்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
/indian-express-tamil/media/media_files/43jBJRwRe2P1uG5S8xop.jpg)
வழக்கமான முறையில் நகங்களை வெட்டுங்கள், நகங்களின் முனைகளை மென்மையாக்குவதற்கு அதனை ஒரே திசையில் ஃபைலிங் செய்வது அவசியம். வாரம் ஒரு முறை 15 நிமிடங்களுக்கு உங்களுடைய நகங்களை வெதுவெதுப்பான ஆலிவ் எண்ணெயில் ஊற வைக்கவும்.
/tamil-ie/media/media_files/uploads/2018/04/Nails.jpg)
இந்த ப்ராடக்டுகள் நன்மை தருவதாக இருந்தாலும் அவற்றை தேர்வு செய்யும் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஃபார்மால்டிஹைட் இல்லாத அதே சமயத்தில் கெரட்டின், கால்சியம் அல்லது தாவர அடிப்படையிலான எண்ணெய்களை பயன்படுத்துங்கள். இவற்றை ஒரு வாரத்தில் 1 அல்லது 2 முறை ஒரு சிகிச்சையாக மட்டுமே பயன்படுத்தவும்.
/indian-express-tamil/media/media_files/2025/01/25/AEJU2lDtc2rE7nlgu1MR.jpg)
உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டாலும் நகத்தின் வளர்ச்சி குறையும். ஊட்டச்சத்துக்களை தேவையான இடங்களுக்கு அனுப்பவும், நச்சுகளை வெளியேற்றவும் நம்முடைய உடலுக்கு தண்ணீர் என்பது அவசியம். இது ஆரோக்கியமான சருமம் மற்றும் நகங்களுக்கு மிகவும் அத்தியாவசியமானது. ஆகவே தினமும் 8 முதல் 10 பெரிய கிளாஸ் தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்தவும். மூலிகை தேநீர்களை கூட நீங்கள் பருகலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/05/29/zuP5xKrzH6EvH6VEFiso.jpg)
தூங்குவதற்கு முன்பு உங்களுடைய நகங்களை எண்ணெய் வைத்து மசாஜ் செய்யவும். கடினமான ஹேண்ட் க்ரீம் அல்லது பெட்ரோலியம் ஜெல்லி தடவுங்கள். இந்த ஈரப்பதத்தை தக்க வைப்பதற்கு காட்டன் கை உறைகளை அணிந்து கொள்ளுங்கள். இந்த இரவு நேர வழக்கமானது நகங்களின் வளர்ச்சியை துரிதப்படுத்தி, அது உடைந்து போகாமல் பாதுகாக்கும்.
/indian-express-tamil/media/media_files/8AhoMV6O5pNXsNyG9DeV.jpg)
சராசரியாக கை நகங்கள் என்பது ஒரு மாதத்தில் 3mm வரை வளரும். அப்படி என்றால் ஒரு குறிப்பிடத்தக்க அளவு நகங்கள் வளர்வதற்கு 3 முதல் 6 மாத பராமரிப்பு தேவைப்படுகிறது. எனவே எப்பொழுதும் ஒரு வழக்கத்தை தொடர்ச்சியாக பின்பற்றுங்கள். அவ்வப்போது இடைவெளி எடுப்பது மற்றும் மனம் தளர்ந்து போவது கூடாது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.