/indian-express-tamil/media/media_files/2025/02/18/ElHop9RCM7859M6U4ipZ.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/05/09/kWCJxBqvuM70a0sWKYGy.jpg)
பொதுவாக நகைகள் வாங்கும்போது நகைகளை பத்திரப்படுத்தி வைக்க நகை கடைகளில் வெல்வெட் துணியாலான அட்டைப் பெட்டிகளில் தருவார்கள். வெல்வெட் துணி கறை நகைகளின் மீது பட்டு நகை பொலிவிழந்து போக வாய்ப்பு இருப்பதால் வெல்வெட் பெட்டிகளின் நகைகளை வைப்பது தவிர்க்க வேண்டும் நகைகளை சுத்தமான பருத்தி துணியில் சுற்றி அதன் டிசைன்கள் மடங்கி சேதாரமாகிவிடாதபடி நீளவாக்கில் பிளாஸ்டிக் டப்பாக்களில் வைத்து எடுத்து பயன்படுத்தலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/05/01/1Dp8wcKJEEXgJRtamcTp.jpg)
சமையலறையில் வேலை செய்யும்போது நுணுக்கமான வேலைப்பாடுகள் செய்த தங்க நகைகளை அணியாதீர்கள். அடுப்பின் சூட்டினால் நகைகளுக்கு பாதிப்பு வரலாம். நகை அணிந்து கொள்ளும் முன்பு மேக்கப் மற்றும் சென்ட் பாடி ஸ்பிரே போன்றவற்றை போட்டுக்கொண்டு அதன் பின் நகைகளை அணிந்துகொண்டால் நல்லது இல்லையெனில் சென்ட் ஸ்ப்ரேயில் உள்ள கெமிக்கல்ஸ் பொருட்கள் நகைகளின் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
/indian-express-tamil/media/media_files/2025/01/29/kLvA4W4zk0AKXQZ0SRf5.jpg)
பிளாட்டினம் நகைகளை அவ்வப்போது மிதமான வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் ஊறவைத்து அதன் பின் மெத்தென்ற துணியினால் சுத்தம் செய்யவேண்டும். வெள்ளி நகைகளை இரும்பு பீரோவில் வைக்கக்கூடாது அப்படியே இரும்பு பீரோவில் வைப்பதாக இருந்தால் ஒரு மரப்பெட்டியினுள் வைத்து வைக்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2024/12/24/vZtYtyLdTtYPboVHmStR.jpg)
வெள்ளி நகைகளை நன்றாக துடைத்து காற்று புகாத வண்ணம் மெல்லிய தாளில் மூடி வைத்தால் கறுக்காமல் அப்படியே இருக்கும். விசேஷங்களுக்கு நகைகளை அணிந்து சென்றவுடன் அப்படியே கழற்றி வியர்வை ஈரத்துடன் உள்ளே வைக்ககூடாது மெல்லிய காட்டன் துணியினால் நன்றாக துடைத்துவிட்டு உள்ளே வைத்தால் எப்பொழுதும் புதிதாக இருக்கும்.
/indian-express-tamil/media/media_files/2024/12/14/Qhp36Tl4msqM6c9fDXc3.jpg)
தங்க நகைகள் அழுக்கடைந்துவிட்டால் ஏதேனும் பற்பசை தடவி பிரஷ்ஷால் தேய்த்தால் அழுக்கெல்லாம் நீங்கி நகைகள் புதிது போல இன்னும். நகைகளின் அதிக அழுக்குகள் இருந்தால் ஷாம்பு போட்டு சுத்தமான தண்ணீரில் ஊறவைத்து டூத் பிரஷ்ஷால் மெதுவாக தேய்த்து கழுவ வேண்டும். வைரம் மிகவும் கடினமான பொருள் என்பதால் வைர நகைகளை மற்ற நகைகளுடன் ஒரே பெட்டியில் அல்லது பையிலும் வைக்கக்கடாது மற்ற நகைகளோடு வைத்தால் கீறல்கள் விழுந்து விடும்.
/indian-express-tamil/media/media_files/2025/03/08/XWHPzitkR17k2PWC4tnW.jpg)
தங்க நகைகளில் கல்நகைகள் கல் வைக்காத நகைகள் என இரண்டு வகைகளில் உண்டு இரண்டையும் ஒன்றாக வைக்காமல் தனித்தனியாக வைக்கவேண்டும். முகத்திற்கு மேக்கப் பவுடர் போட்டுக்கொண்ட பின்னரே வைரத்தோடுகளை அணிந்துகொண்டால் பொலிவு மாறாமல் இருக்கும். வைரத்தோடு மூக்குத்தி போன்ற நகைகளை ஒரு கிண்ணம் வீபூதியில் போட்டு வைத்து பிறகு நன்றாக பாலிஷ் செய்தால் பளபளக்கும்.
/indian-express-tamil/media/media_files/2024/11/21/yYizU6HSjhm5F88dgVSn.jpg)
கல்பதித்த நகைகளை வெந்நீரில் போட்டு கழுவக்கூடாது வெந்நீரில் போட்டால் கற்களுக்கு சேதம் ஏற்பட்டு அதன் பளபளப்பு தன்மை நீங்கிவிடும். கல்பதித்த நகைகளை அணியும் போது மெத்தைகளின் அல்லது மிருதுவான விரிப்புகளின் மீது இருந்து கொள்வது நல்லது ஏனென்றால் அணியும்போது கை தவறி கீழே விழுந்தால் கற்கள் உடைந்துவிடும். நகைகளை நல்ல பட்டு துணியால் வியர்வை ஈரம் போகத் துடைத்து சுற்றி வைக்கவேண்டும் நகைகளை வைக்கும் பொழுது கவரிங் நகைகளையும் சேர்த்து அணிந்து கொண்டு அதனுடன் கழற்றி வைக்கக் கூடாது அதனால் தங்க நகைகளும் தேய்ந்துவிடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.