/indian-express-tamil/media/media_files/2025/05/27/yMoWKBflZjZicMNX5b7C.jpg)
/indian-express-tamil/media/media_files/igXxahiHY3L3UROP93ZG.jpg)
தேங்காய் எண்ணெய்யை 2 விதமாக தயாரிக்கலாம். ஒன்று மரச்செக்கில் எண்ணெய் ஆட்டுவது, மற்றொன்று தேங்காய் பாலை சுண்டக் காய்ச்சுவது. பொதுவாக எல்லோரும் தேங்காய் எண்ணெய் தயாரிப்பதற்கு தேங்காயை 10 நாட்களுக்கு வெயிலில் காய வைத்து அதன் பிறகு, மெஷினில் அரைக்க கொடுத்து தேங்காய் எண்ணெய் எடுப்பார்கள்.
/indian-express-tamil/media/media_files/0xZpczkP1PKvmciuDN4c.jpg)
ஆனால் நாம் இதை செய்வதற்கு வீட்டில் உடைக்கும் போது தேங்காய் லேசாக நிறம் மாறி கேட்டு போனது போல தெரிந்தால் கூட அதை வைத்து செய்யலாம். மரச்செக்கில் ஆட்டி தேங்காய் எண்ணெய் எடுக்கும்போது 70% தேங்காய் எண்ணெய் மட்டுமே எடுக்க முடியும். ஆனால், நாம் தேங்காயை வெயிலில் காய வைக்காமல் எண்ணெய்யை எப்படி எடுக்கலாம் என பார்க்கப் போகிறோம். எந்தவித ரசாயன கலப்பும் இன்றி வீட்டிலேயே செய்யலாம்.
/indian-express-tamil/media/media_files/Zj0Cp5ewQoZly4PwkTNM.jpg)
தேங்காயில் உள்ள நீரை வடிகட்டிய பின் அதை உடைத்து சில்லுகளாக எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். நறுக்கிய துண்டுகளில் சிறிது, சிறிதாக நீர் விட்டு நன்கு நைஸாக அரைத்து தேங்காய்ப் பாலை ஒரு வெள்ளைத்துணியால் வடிகட்டி எடுக்க வேண்டும். வெள்ளைத்துணியால் நன்கு அழுத்திப் பிழிந்தெடுத்த பின் ஓரிரவு முழுதும் அதை அப்படியே ஒரு பாத்திரத்தில் மூடி வைக்கவும். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் பாத்திரத்தின் மேற்புறத்தில் நமக்கு எண்ணெய் காய்ச்சத் தேவையான தெளிவு படிந்திருக்கும்.
/indian-express-tamil/media/media_files/JZ5mpx3af8z4KMlwJ59f.jpg)
அதை ஒரு கரண்டியின் உதவியால் மெதுவாக வழித்து வேறொரு ஜாடியில் சேகரிக்க வேண்டும். இந்த ஜாடியை மைக்ரோ வேவ் ஓவனிலோ அல்லது கேஸ் அடுப்பிலோ வைத்து மிதமான சூட்டில் தேங்காய் பாலை சூடுபடுத்துங்கள். சுண்டி வரும் வரை கிளறி கொண்டே இருப்பது அவசியம்.
/indian-express-tamil/media/media_files/2025/03/17/ggP6f1iKTH9Qq1sDP2xR.jpg)
இது நீண்ட நேரம் எடுக்கும். எனவே பொறுமை தேவை. பாலை சுண்டக் காய்ச்சி பால்கோவா செய்வது போல தேங்காய் பால் சுண்டக் காய்ச்சுங்கள். தேங்காய் பால் நன்கு சுண்டக் காய்ச்சிய பிறகு எண்ணெய் பிரிந்து வர ஆரம்பிக்கும். அதுவரை அடி பிடிக்காமல் கிளறி கொண்டே இருங்கள். எண்ணெய் பிரியும் போது கொப்பளிக்கும். கொஞ்சம் கவனமாக இருங்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/04/11/deXnOo5edHUM78b8hMpc.jpg)
சூடுபடுத்துவதை நிறுத்தி அரை மணி நேரத்திற்கு ஆற விடுங்கள். எண்ணெய் உடன் பக்கோடா தூள் கலந்தது போல இருக்கும். முதலில் எண்ணெய்யை கரண்டியில் எடுத்து வடிகட்டியில் வடுகட்டவும். தூள் போல் இருப்பதை வெள்ளை துணியில் போட்டு பிழிந்து வடிகட்டுங்கள். அதிலிருந்தும் எண்ணெய் வரும். இது மிகவும் சுத்தமான எண்ணெய் ஆகும். இப்போது எண்ணெய்யை பாட்டிலுக்கு மாற்றி கொள்ளலாம்.
/indian-express-tamil/media/media_files/3v8X1Bbyyb3CRxGzkXaN.jpg)
இந்த தேங்காய் எண்ணெய்யை நீங்கள் சமையலுக்கும் பயன்படுத்தலாம். அதே போல தலைக்கும் தேய்க்கலாம். இப்படி வீட்டில் தயாரிக்கையில் அதன் அளவு குறைவாகத்தான் இருக்கும். ஆனாலும் இந்த எண்ணெயையும் நாம் சமையலுக்குப் பயன்படுத்தலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.