/indian-express-tamil/media/media_files/2025/07/07/screenshot-2025-07-07-220910-2025-07-07-22-10-43.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/07/screenshot-2025-07-07-220916-2025-07-07-22-11-01.png)
உருளைக்கிழங்கை தோல் சீவி, சிறிய துண்டுகளாக நறுக்கவும். நறுக்கிய உருளைக்கிழங்கை உப்பு சேர்த்து, தண்ணீரில் வேகவைத்து, தண்ணீர் வடித்துக்கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/07/screenshot-2025-07-07-220929-2025-07-07-22-11-01.png)
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்த்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/07/screenshot-2025-07-07-220948-2025-07-07-22-11-01.png)
குறைந்த தீயில் வைத்து, அடிக்கடி கிளறி, உருளைக்கிழங்கு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். பொரியல் தயாரானதும், கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/07/screenshot-2025-07-07-221005-2025-07-07-22-11-01.png)
உருளைக்கிழங்கை வேக வைக்கும்போது, அதிக நேரம் வேகவைக்காமல் பார்த்துக்கொள்ளவும். வதக்கும்போது, எண்ணெய் அதிகம் சேர்க்காமல், குறைந்த தீயில் வதக்கவும். உருளைக்கிழங்கை கிளறும் போது, உடையாமல் பார்த்துக்கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/07/screenshot-2025-07-07-220910-2025-07-07-22-10-43.jpg)
இது எல்லாத்தையும் விட ஒரு சூப்பர் டிப் என்னவென்றால், இதை செய்வதற்கு ஒரு ஆதி கனமான பாத்திரத்தை பயன்படுத்த வேண்டும். இதை செய்தால் உங்கள் பொரியல் ஒட்டாமல் கருகாமல் இருக்கும். நன்கு ருசியாகவும் இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.