/indian-express-tamil/media/media_files/2025/08/01/screenshot-2025-08-01-164134-2025-08-01-16-42-48.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/08/01/screenshot-2025-08-01-164139-2025-08-01-17-25-30.png)
தேவையான பொருட்கள்
சிக்கன் - 500 கிராம், பாசுமதி அரிசி - 2 கப், பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது), தக்காளி - 2 (நறுக்கியது), இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் - 3-4 (நறுக்கியது), மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன், தனியா தூள் - 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், கரம் மசாலா - 1 டீஸ்பூன், பிரியாணி இலை - 2, பட்டை - 1, கிராம்பு - 3-4, ஏலக்காய் - 2-3, புதினா - 1/2 கட்டு (நறுக்கியது), கொத்தமல்லி - 1/2 கட்டு (நறுக்கியது), எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன், தயிர் - 1/2 கப், எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன், நெய் - 2 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, தண்ணீர் - 3 1/2 கப்.
/indian-express-tamil/media/media_files/2025/08/01/screenshot-2025-08-01-164156-2025-08-01-17-25-30.png)
சிக்கனை நன்கு கழுவி, இஞ்சி பூண்டு விழுது, தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா, உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிசைந்து, 30 நிமிடம் ஊற வைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/01/screenshot-2025-08-01-164202-2025-08-01-17-25-30.png)
அரிசியை கழுவி, 20 நிமிடம் ஊற வைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/01/screenshot-2025-08-01-164210-2025-08-01-17-25-30.png)
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடாக்கவும். பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின் பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/01/screenshot-2025-08-01-164220-2025-08-01-17-25-30.png)
ஊறவைத்த சிக்கனை சேர்த்து, நன்கு வதக்கவும். மசாலாவுடன் சிக்கன் நன்கு கலந்ததும், தண்ணீர் சேர்க்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/01/screenshot-2025-08-01-164228-2025-08-01-17-25-30.png)
தண்ணீர் கொதித்ததும், ஊறவைத்த அரிசியை சேர்த்து கிளறவும். உப்பு சரிபார்த்து, தீயை குறைத்து, பாத்திரத்தை மூடி, அரிசி மற்றும் சிக்கன் நன்கு வேகும் வரை வேக வைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/01/screenshot-2025-08-01-164234-2025-08-01-17-25-30.png)
அரிசி மற்றும் சிக்கன் வெந்ததும், மேலே சிறிது நெய் சேர்த்து மூடி வைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/01/screenshot-2025-08-01-164134-2025-08-01-16-42-48.jpg)
10 நிமிடம் கழித்து திறந்து பார்த்தல் அருமையான வாசனை ஊரையே இழுக்கும் அளவிற்கு ஒரு பிரியாணி தயார்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.