உலகிலேயே மிகப்பெரிய உதட்டை பெறவேண்டும், என்பதற்காக இந்த அறுவைசிகிச்சையை மேற்கொண்டதாக வியன்னா குறிப்பிட்டு இருக்கிறார். உலக சாதனை படைப்பதற்காக உதடுகளை பெரிதாக்க கோடிகளில் செலவிடுகிறார் வியன்னா.
2/5
இவர் உதடு மட்டுமின்றி முகத்தில் பல்வேறு அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டள்ளார். இதற்காக இவர் $160,000 (இந்திய மதிப்பில் ரூ.1.3 கோடி) வரை செலவிட்டுள்ளார்.
3/5
தனது தனித்துவமான தோற்றத்தை தக்க வைத்துக் கொள்ள இன்னும் உதட்டை பெரியதாக மாற்ற தொடர்ந்து சிகிச்சைகள் மேற்கொள்ள போவதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார். வியன்னா தனது 18 வயதிலேயே அழகு சாதன அறுவை சிகிச்சை செய்ய தொடங்கி இருக்கிறார்.
Advertisment
4/5
அவரது அறுவை சிகிச்சைகளில் மார்பக பகுதி பெருக்குதல், உதடு லிப் செய்தல், கண்களை லிப்செய்தல், கண்ணம் உள்ளிட்ட பல்வேறு அறுவை சிகிச்சைகளை இவர் மேற்கொண்டுள்ளார். ”தனது உடலில் கொழுப்பை விட அதிகமாக பிளாஸ்டிக் தான் இருக்கும்” என்றும் அவர் கூறியிருக்கிறார்.
5/5
வியன்னா ஒரு இன்ஃப்ளுயன்சர் என்பதால் சமூக ஊடகங்களில் இவரின் புகைப்படம் வைரலாகி கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது. இதற்கு முன்பு பல்கேரியாவின் சோபியாவைச் சேர்ந்த ஆண்ட்ரியா இவனோவா என்ற பெண், 32 முறை உதடுகளின் அளவை பம்ப் செய்து அவற்றை பெரிதாக மாற்றியிருக்கிறார். அதற்காக ஆண்ட்ரியா 8000 பவுண்ட்களை செலவு செய்துள்ளார். இந்திய ரூபாயில் 7.59 லட்சம் ஆகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news