/indian-express-tamil/media/media_files/2025/09/02/istockphoto-469544116-612x612-1-2025-09-02-23-57-31.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/09/02/istockphoto-2160846814-612x612-2025-09-02-23-57-45.jpg)
கருப்பு உளுந்து செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கை தடுக்க உதவுகிறது. இது உடலுக்கு ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தத்தை வழங்கி ஆற்றலை அதிகரிக்கிறது. மேலும், எலும்புத் தாது அடர்த்தியை உயர்த்தி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகளை தவிர்க்க உதவுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/09/02/istockphoto-1322057439-612x612-2025-09-02-23-57-45.jpg)
கருப்பு உளுந்தம் பருப்பில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, மற்றும் வீக்கத்தைத் தடுக்க உதவுகிறது. மேலும், உடலில் ஊட்டச்சத்துகளை உறிஞ்சும் செயலையும் மேம்படுத்துகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/09/02/istockphoto-2160848683-612x612-2025-09-02-23-57-45.jpg)
கருப்பு உளுத்தம் பருப்பில் நிறைந்த இரும்புச்சத்து, ரத்த சிவப்பணுக்களை உருவாக்கி உடலுக்கு ஆக்ஸிஜன் செல்வதைக் மேம்படுத்துகிறது. இது உடலின் ஆற்றலை உயர்த்தி, இரத்த சோகையைத் தடுக்கும்.
/indian-express-tamil/media/media_files/8lITvvtG6tu6W7KLXakD.jpg)
கருப்பு உளுத்தம் பருப்பில் உள்ள தாதுக்கள் எலும்பு தாது அடர்த்தியை பாதுகாக்க உதவுகின்றன. வயதானால் ஏற்படும் எலும்புப் பலவீனம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனைகளைத் தடுக்க இது பயனாகிறது.
/indian-express-tamil/media/media_files/POSlhiOTTLzZPfqXWHfx.jpg)
நீரிழிவு நோய் இருப்பவர்கள் எப்போதும் தங்களின் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில், நாம் சாப்பிடும் உணவு தான் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஒரே விஷயம். நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக நார்ச் சத்துள்ள உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஏனெனில் இவை செரிமான மண்டலத்தால் உறிஞ்சப்படும் ஊட்டச்சத்துக்களின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால், உங்கள் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க முடியும்.
/indian-express-tamil/media/media_files/ymjILFWzlMaGJN6Fy82A.jpg)
கருப்பு உளுந்தம் பருப்பு சருமத்துடன் தொடர்புடைய ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. கருப்பு உளுந்தில் உள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள், சருமத்தில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், கரும் புள்ளிகளை அகற்றவும், சருமத்தை ஆக்ஸிஜனேற்றம் செய்யவும், பளபளப்பாகவும் மாற்றவும் உதவும். மேலும், வெயிலால் ஏற்படும் டான்களில் இருந்து விடுபடவும், முகப்பருவைக் குறைக்கவும் கருப்பு உளுத்தம் பருப்பு உதவும்.
/indian-express-tamil/media/media_files/LDMZ6D6LrTynUTnFvVK0.jpg)
கருப்பு உளுந்தம் பருப்பு சிறந்த டையூரிடிக் ஆக செயல்பட்டு, உடலிலுள்ள நச்சுகள் மற்றும் தேவையற்ற பொருட்களை சிறுநீரில் ஊக்குவித்து வெளியேற்ற உதவுகிறது. இதனால் சிறுநீரக கற்கள் ஏற்படுவதைத் தடுக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.