/indian-express-tamil/media/media_files/2025/08/21/actress-2025-08-21-15-50-46.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/08/21/actress-16-2025-08-21-15-50-46.jpg)
பாலிவுட் திரையுலகில் சுமார் 25 ஆண்டுகள் பயணம் செய்து, முன்னணி நட்சத்திரங்களான ஷாருக்கான், அக்ஷய்குமார், ஹ்ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் போன்ற பலருடன் இணைந்து நடித்தவர் நடிகை மாயா அலாக். ஆனால், திடீரென ஒரு நாள் தனது சினிமா பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/08/21/actress-15-2025-08-21-15-50-46.jpg)
1980-ம் ஆண்டு வெளியான தோடிஷி பேவாஃபாய் (Thodisi Bewafaii) திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் மாயா அலாக். ஆரம்பம் முதலே தாய், மாமியார் போன்ற துணை கதாபாத்திரங்களிலேயே அதிகம் நடித்து வந்தார். ஷாருக்கான் நடித்த 'குட்டு' படத்தில் அவரது மாமியார் கதாபாத்திரத்திலும், ஐஸ்வர்யா ராய் நடித்த உமாராவ் ஜான்('Umrao Jaan') படத்தில் அவரது தாயார் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/08/21/actress-17-2025-08-21-15-50-46.jpg)
சுமார் 25 ஆண்டுகள் திரைத்துறையில் கோலோச்சிய மாயா அலாக், தொடர்ந்து ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பதால் ஏற்பட்ட சலிப்பு காரணமாகவே இந்த முடிவை எடுத்தார். தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என கருதிய அவர், 2006-ம் ஆண்டுக்குப் பிறகு நடிப்பதை முழுமையாக நிறுத்திக்கொண்டார். உமாராவ் ஜான்('Umrao Jaan') திரைப்படம் தான் அவரது கடைசி படமாக அமைந்தது.1995-ல் ஷாருக்கான் நடிப்பில் வந்த 'குட்டு' படத்தில் மாமியாராகவும், 2006-ல் வெளியான 'உம்ராவ் ஜான்' படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு அம்மாவாகவும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/08/21/actress-2025-08-21-15-50-46.jpg)
தற்போது பிரிட்டானியா நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரியான சுனில் அலக்கை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுடன் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். சினிமா துறையை விட்டு விலகிய பிறகு, தனது சொந்த பண்ணை வீட்டில் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவதில் மகிழ்ச்சி கொண்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.