/indian-express-tamil/media/media_files/2025/05/12/O3EkfU66JCytlFtlOM1o.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2023/01/diabetes_759.jpg)
ஆரோக்கியமான நபருடன் ஒப்பிடும்போது, சர்க்கரை நோயாளிக்கு அவர்கள் விரும்பியதைச் சாப்பிடுவது என்பது சிக்கலாக இருக்கும். அவர்கள் கவனத்துடன் சாப்பிடுவதைப் பயிற்சி செய்ய வேண்டும். இதற்காக கட்டுப்பாடான உணவுத் திட்டத்தை கடைபிடிக்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2024/11/26/jgDBIKA5qhYRZ35HsO8s.jpg)
கோடையில், சந்தையில் பலவிதமான பழங்கள் மற்றும் பழச்சாறுகள் கிடைக்கும்போது, ஒரு சர்க்கரை நோயாளி அதையெல்லாம் சாப்பிட முடியுமா என்று யோசிக்க வாய்ப்புள்ளது. உதாரணமாக, கரும்புச்சாறு கோடையில், குறிப்பாக இந்தியாவில் பரவலாக விற்கப்படும். மற்ற சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்ற ஜூஸ் போலல்லாமல், இது ஆரோக்கியமான விருப்பங்களில் ஒன்றாக இருக்கலாம். ஆனால் இதை சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?
/indian-express-tamil/media/media_files/2OkoLgSRJew9VpUi8nU9.jpg)
கரும்புச் ஜூஸ் ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட இயற்கையான பானமாகும். இது தாமிரம், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, பி1, பி2, பி3 மற்றும் சி, துத்தநாகம், மாங்கனீசு, கால்சியம் மற்றும் இரும்பு போன்ற முக்கிய தாதுக்களைக் கொண்டுள்ளது.
/indian-express-tamil/media/media_files/ZxSBUvohaZNtJLFd0MVz.jpg)
மருந்தியல் ஆய்வுகளில் வெளியிடப்பட்ட மதிப்பாய்வின்படி , கரும்புச்சாறு 70-75% நீர், 13-15% சுக்ரோஸ் மற்றும் 10-15% நார்ச்சத்து ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கூடுதலாக, கரும்புச்சாறு இந்தியாவில் மஞ்சள் காமாலை, ரத்தக்கசிவு, டைசூரியா, அனூரியா மற்றும் பிற சிறுநீர் நோய்களுக்கான சிகிச்சைக்காக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது என்று அதே ஆய்வு குறிப்பிடுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/05/12/9YZyga4sclZzFSj5l9nC.jpg)
கரும்பு சாறு பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இருப்பினும், இதில் சர்க்கரை அதிகமாக உள்ளது. ஒரு கார்போஹைட்ரேட் உடல் குளுக்கோஸாக உடைந்து, இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும். 250 மில்லி ஜூஸில் 50 கிராம் சர்க்கரை உள்ளது, இது 12 டீஸ்பூன் சர்க்கரைக்கு சமம்.
/indian-express-tamil/media/media_files/2025/05/12/rtHDyraBMThypEt9s8Ws.jpg)
வயது வந்த பெண்கள் ஒரு நாளைக்கு 24 கிராமுக்கு மேல் உட்கொள்ளக்கூடாது. ஆண்கள் 36 கிராமுக்கு மேல் உட்கொள்ளக்கூடாது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு வழங்கப்படலாம் என்றாலும், இது மிகச் சிறிய அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் அல்லது குடிக்கவே கூடாது என்று கூறியுள்ளார் நிபுணர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.