எலுமிச்சை பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கின்றன மற்றும் சருமத்தை சரிசெய்ய உதவுகின்றன. அதை பற்றி விரிவாக தெரிந்துகொள்வோம்.
எலுமிச்சை பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கின்றன மற்றும் சருமத்தை சரிசெய்ய உதவுகின்றன. அதை பற்றி விரிவாக தெரிந்துகொள்வோம்.
எலுமிச்சை முகத்திற்கு இயற்கையான ப்ளீச் மற்றும் அழுக்குகளை சுத்தப்படுத்தும் ஒன்றாக கருதப்படுகிறது. எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துகள் அதிக அளவில் உள்ளது. இது சருமத்தில் உள்ள கறைகளைக் குறைத்து சருமத்தைப் பிரகாசமாக்க உதவுகிறது.
2/7
எலுமிச்சை பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கின்றன மற்றும் சருமத்தை சரிசெய்ய உதவுகின்றன. எலுமிச்சை பல அழகு சாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் நம் முகங்களுக்கான மாஸ்க்கில் பஎலுமிச்சை சாறு பயன்படுத்தப்படுகிறது. இவ்வுளவு நன்மையாக இருந்தாலும், எலுமிச்சையை நேரடியாக சருமத்தில் தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
3/7
எலுமிச்சையை நேரடியாக முகத்தில் தேய்ப்பது தோல் எரிச்சல், தடிப்புகள், சிவத்தல் மற்றும் ஒவ்வாமைகளை ஏற்படுத்தும். உண்மையில், எலுமிச்சையின் pH அளவு மிகவும் குறைவாக உள்ளதோடு மிகவும் அமிலத்தன்மை கொண்டது. இதன் காரணமாக, எலுமிச்சையை நேரடியாக உடலில் தேய்ப்பது தீங்கு விளைவிக்கும்.
Advertisment
4/7
குறிப்பாக உணர்திறன் வாய்ந்த சருமம், முகப்பரு, அரிக்கும் தோலழற்சி மற்றும் தோல் அழற்சி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இதைச் செய்யவே கூடாது. இது தவிர, முகத்தில் எலுமிச்சையைப் பூசிய பிறகு வெயிலில் செல்வதும் ஆபத்தானது. முகத்தில் எலுமிச்சையைத் தேய்த்த பிறகு கொப்புளங்கள் அல்லது எரியும் உணர்வு ஏற்பட்டால், மருத்துவரை அணுகவும்.
5/7
எலுமிச்சையை நேரடியாக முகத்தில் தேய்ப்பதற்குப் பதிலாக, தேன், தயிர் அல்லது முகத்தில் தேய்க்கும் வேறு எந்த பொருளோடும் சேர்த்து தடவலாம்
6/7
நீங்கள் எலுமிச்சையைப் பயன்படுத்தினால், அதன் பிறகு கட்டாயம் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். எலுமிச்சையை முகத்தில் தேய்க்கும் முன், மணிக்கட்டில் தடவி ஒரு தடவை டெஸ்ட் செய்யுங்கள்.
Advertisment
Advertisements
7/7
உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதை முகத்தில் தேய்க்க வேண்டாம். இது தவிர, தோல் தொடர்பான ஏதேனும் பிரச்சனை உள்ளவர்கள் அல்லது அதிக சரும உணர்திறன் உடையவர்கள், எந்த நிலையிலும் எலுமிச்சையை முகத்தில் நேரடியாகப் பூசக்கூடாது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news