பூ தான் இந்த சிறுமிக்கு அடையாளம்; கமல்ஹாசனுடன் நடித்தவர்; யார்னு கண்டுபிடிங்க!
மலையாளம் மற்றும் தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபலமான நடிகையின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இச்சிறுமியை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?
மலையாளம் மற்றும் தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபலமான நடிகையின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இச்சிறுமியை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?
இன்றைய சூழலில் சினிமா பிரபலங்களின் குழந்தைப் பருவ மற்றும் அரிதான புகைப்படங்களை காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். அதன்படி, இப்புகைப்படத்தில் இருக்கும் சிறுமி, இப்போது யாரென்று உங்களுக்கு தெரிகிறதா?
2/5
மலையாளம் மற்றும் தமிழில் தனித்துவமான திரைப்படங்களில் நடித்த நடிகை பார்வதியின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் தான் இவை. இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
3/5
இவர் தமிழில் 'பூ' என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் கால் பதித்தார். இதன் பின்னர், மலையாளத்தில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, தனித்துவமான கதைகளில் மட்டுமே தொடர்ந்து நடித்து வருகிறார்.
Advertisment
4/5
மலையாளத்தில் வெளியான 'சார்லி', 'பேங்களூர் டேஸ்', 'புழு', 'டேக் ஆஃப்', 'என்னு நிண்டே மொய்தீன்' போன்ற மாறுபட்ட கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், மலையாளத்தின் முன்னணி நடிகர்களான மம்மூட்டி, துல்கர் சல்மான், ப்ரித்வி ராஜ் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்துள்ளார். இது தவிர நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய ஏராளமான படங்களிலும் நடித்திருக்கிறார்.
5/5
தமிழில், 'மரியான்', 'பேங்களூர் நாட்கள்', 'சிவரஞ்சினியும் சில பெண்களும்' போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, 'உத்தம வில்லன்' திரைப்படத்தில் கமல்ஹாசனின் மகளாக நடித்திருந்தார். மலையாளத்தைப் போலவே தமிழிலும் இவருக்கு கணிசமான அளவு ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில், 'தங்கலான்' படத்தில் இவர் ஏற்று நடித்த பாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது.