தனுஷ் படத்தில் அறிமுகம்; விஷாலின் ஹிட் பட நடிகை; இந்த சிறுமி இப்போ டாப் ஸ்டார்!
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஒருவரது குழந்தைப் பருவ புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சிறுமி யாரென்று தெரிகிறதா?
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஒருவரது குழந்தைப் பருவ புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சிறுமி யாரென்று தெரிகிறதா?
சினிமா பிரபலங்களின் குழந்தைப் பருவ மற்றும் அரிதான புகைப்படங்கள் பரவுவது இப்போது வழக்கமாகி விட்டது. அந்த வகையில், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிரபல நடிகையின் குழந்தைப் பருவ புகைப்படம் இதில் இடம்பெற்றுள்ளது. இவரை அடையாளம் காண முடிகிறதா?
2/5
நடிகை ரிது வர்மாவின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் தான் இவை. குறும்படங்கள் மூலமாக தனது பயணத்தை தொடங்கிய இவர் அதன் பின்னர், திரைப்படங்களில் துணை நடிகை பாத்திரங்களில் நடித்து தெலுங்கு திரையுலகில் நுழைந்தார்.
3/5
அந்த வகையில், கடந்த 2016-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'பெல்லி சூப்புலு' திரைப்படம் இவருக்கான அடையாளத்தை கொடுத்தது. இதில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் நந்தி விருது மற்றும் ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்றார்.
Advertisment
4/5
தனுஷ், கஜோல் ஆகியோர் நடிப்பில் வெளியான 'வேலையில்லா பட்டதாரி - 2' திரைப்படத்தின் மூலம் தமிழில் ரிது வர்மா அறிமுகமானார். எனினும், துல்கர் சல்மானுடன் இவர் இணைந்து நடித்த 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' திரைப்படம் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதன் மூலம் தமிழிலும் கணிசமான அளவு ரசிகர்களை ரிது வர்மா பெற்றார்.
5/5
அண்மையில், தமிழில் இவர் நடிப்பில் வெளியான 'மார்க் அண்டனி' திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. ஓடிடி தளங்களில் வெளியான சில சீரிஸ்களில் ரிது வர்மா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.