இருவருக்கும் 6 வயது வித்தியாசம்; ரெண்டு பேரும் தமிழ் சினிமா டாப் ஸ்டார்ஸ்: யார்னு கண்டுபிடிங்க!
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக வலம் வரும் இருவரின் இளம் வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர்கள் இருவரும் யாரென்று உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக வலம் வரும் இருவரின் இளம் வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர்கள் இருவரும் யாரென்று உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?
தமிழ் திரையுலகில் நிறைய ஸ்டார் கிட்ஸ் இருக்கின்றனர். இவர்களில் சிலர், தங்கள் திறமை மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளனர். அதன்படி, இந்த இருவரும் இப்போது யார் என தெரிகிறதா?
2/5
சிம்பு மற்றும் அருண் விஜய்யின் இளம் வயது புகைப்படம் தான் இது. சினிமா உலகில் கோலோச்சிய டி. ராஜேந்திர் மற்றும் விஜயகுமாரின் மகன்கள் என்ற அடையாளத்துடன் அறிமுகமாகி இருந்தாலும், தங்களது தனித்துவமான நடிப்பு மூலம் பலரையும் கவர்ந்துள்ளனர்.
3/5
தனது தந்தையின் இயக்கத்தில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சிம்பு, 'காதல் அழிவதில்லை' படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார். மறுபுறம், சிறுவயதில் இருந்து நடிப்பு மீது ஆர்வம் கொண்ட அருண் விஜய், 'முறை மாப்பிள்ளை' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
Advertisment
4/5
அதன் பின்னர், பல படங்களில் நடித்தாலும் 'தொட்டி ஜெயா' படம் சிம்புவின் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது. இதேபோல், மகிழ் திருமேனி இயக்கத்தில் 'தடையறத் தாக்க' படம், அருண் விஜய் கலைப்பயணத்தில் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது.
5/5
அதன் பின்னர், இருவரும் தனித்தனியாக பல படங்களில் நடித்தனர். இதைத் தொடர்ந்து, 2018-ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'செக்க சிவந்த வானம்' திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். இப்படத்தில், அரவிந்த் சாமி, ஜோதிகா, விஜய் சேதுபதி ஆகியோரும் முக்கிய பாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.