எப்போதாவது கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி தங்களுக்கான வாய்ப்பை உருவாக்குபவர்கள் நிச்சயம் புத்திசாலிகளாக இருப்பார்கள். அந்த வரிசையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஒருவருடைய குழந்தைப் பருவ புகைப்படம் இதில் இடம்பெற்றுள்ளது. இவரை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?
2/5
கடந்த பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை வென்ற சௌந்தர்யாவின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் தான் இவை. இவருக்கு பிக்பாஸில் எந்த அளவிற்கு ஆதரவு இருந்ததோ, அதே அளவிற்கு எதிர்ப்பும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
3/5
ஆஹா ஓடிடி தளத்தில் வெளியான 'வேற மாறி ஆஃபீஸ்' வெப் சீரிஸ், இவருக்கு வரவேற்பை பெற்றுத் தந்தது. இது தவிர 'வில்லா டூ வில்லேஜ்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
Advertisment
4/5
சின்னத்திரை மட்டுமின்றி சில திரைப்படங்களிலும் சௌந்தர்யா நடித்துள்ளார். 'தமிழ் படம் 2', 'உறியடி 2', 'சூப்பர் டூப்பர்', 'நித்தம் ஒரு வானம்' போன்ற திரைப்படங்களில் சிறு வேடங்களில் இவர் நடித்திருக்கிறார்.
5/5
மேலும், அடுத்தடுத்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சௌந்தர்யா தொடர்ச்சியாக நடித்து வருகிறார். சமூக ஊடகங்களிலும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.