வெள்ளித்திரை அழகிய லைலா; சிறு வயதில் எவ்ளோ க்யூட் பாருங்க; இப்போ இவர் சினிமாவில் இல்லையே!
வெள்ளித்திரையில் பிரபலமான நாயகியாக வலம் வந்த ஒரு கதாநாயகியின் இளம் வயது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவுகிறது. இவர் யாரென்று உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?
வெள்ளித்திரையில் பிரபலமான நாயகியாக வலம் வந்த ஒரு கதாநாயகியின் இளம் வயது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவுகிறது. இவர் யாரென்று உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?
தமிழ் சினிமாவில் எத்தனையோ கதாநாயகிகள் இருந்தாலும் சிலர் மட்டுமே ரசிகர்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்துள்ளனர். அப்படி ஒரு நாயகியின் இளம் வயது புகைப்படம் இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இவரை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?
2/5
ஏறத்தாழ 15 வயதிலேயே தனது கலைப்பயணத்தை தொடங்கிய நடிகை ரம்பாவின் இளம் வயது புகைப்படங்கள் தான் இவை. 1992-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'சர்கம்' என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகை ரம்பா சினிமாவில் அறிமுகமானார்.
3/5
அதன் பின்னர், தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், பெங்காலி என பல்வேறு மொழிகளில் நடித்த பான் இந்தியன் நடிகையாக உயர்ந்தார். குறிப்பாக, நடிகை ரம்பா தோன்று பாடல் காட்சிகள் அனைத்தும் அப்போதைய காலத்திலேயே பெரும் வைரலாகின. இதற்கு 'அழகிய லைலா' பாடலை உதாரணமாக கூறலாம்.
Advertisment
4/5
இதைத் தொடர்ந்து, தமிழில் 'உள்ளத்தை அள்ளித்தா', 'செங்கோட்டை', 'சுந்தர புருஷன்', 'சிவசக்தி', 'அருணாச்சலம்', 'காதலா காதலா' போன்ற ஏராளமான வெற்றிப் படங்களில் ரம்பா நடித்துள்ளார். தமிழில் ரஜினி, கமல் மட்டுமல்லாமல், இந்தியில் சல்மான் கான் போன்ற முன்னணி நடிகர்களுடனும் ரம்பா நடித்துள்ளார்.
5/5
இந்நிலையில், கனடாவில் வசித்து வரும் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட நடிகை ரம்பா, அதன் பின்னர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். தற்போது, சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக ரம்பா இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.