மலையாளத்தில் முன்னணி நடிகையான ஷோபனாவிற்கு, தமிழிலும் கணிசமான அளவு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தமிழில் ரஜினிகாந்துடன் 'தளபதி', கமல்ஹாசனுடன் 'எனக்குள் ஒருவன்', பாக்யராஜுடன் 'இது நம்ம ஆளு' போன்ற மிகச் சில படங்களில் நடித்திருந்தாலும், இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
2/5
ஆனால், மலையாளத்தில் இவர் ஏற்று நடிக்காத பாத்திரங்களே இல்லை என்று கூறலாம். நடனம் மற்றும் நடிப்பு ஆகியவை ஒன்றாக அமைந்த நடிகைகளில் ஷோபனாவிற்கு முக்கிய இடம் இருக்கிறது.
3/5
கேரள அரசு விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருது, தேசிய விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷன் என ஏராளமான விருதுகளை வென்ற பெருமையும் நடிகை ஷோபனாவிற்கு இருக்கிறது. தற்போதும் கூட, மோகன்லாலுடன் இணைந்து இவர் நடித்த 'துடரும்' திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.
Advertisment
4/5
பல்வேறு மொழிகளில் ஏறத்தாழ 200 படங்களுக்கும் மேல் ஷோபனா நடித்துள்ளார். நடிப்பை கடந்த நடனத்தின் மீது அதிகமான ஆர்வம் கொண்ட ஷோபனா, நிறைய கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
5/5
55 வயதான நடிகை ஷோபனா தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், கடந்த 2011-ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தையை நடிகை ஷோபனா தத்தெடுத்தார். இந்தக் குழந்தைக்கு அனந்த நாராயணி என்று பெயரிட்டுள்ளார்.