பொன்னியின் செல்வனை காதலித்தவர்; இப்போ வாரிசு நடிகரின் மனைவி; இந்த சிறுமி யார் தெரியுமா?
சமீப நாட்களில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையின் குழந்தைப் பருவ புகைப்படம் நெட்டிசன்கள் இடையே வேகமாக பரவுகிறது. இந்த சிறுமி யாரென்று உங்களுக்கு தெரிகிறதா?
சமீப நாட்களில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையின் குழந்தைப் பருவ புகைப்படம் நெட்டிசன்கள் இடையே வேகமாக பரவுகிறது. இந்த சிறுமி யாரென்று உங்களுக்கு தெரிகிறதா?
இன்றைய இளைஞர்கள் இடையே பிரபலமான ஒரு நடிகையின் குழந்தைப் பருவ புகைப்படம், சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சிறுமி இப்போது யாரென்று உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?
2/5
'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான ஷோபிதாவின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் தான் இவை.
3/5
ஆந்திராவைச் சேர்ந்த ஷோபிதாவின் தந்தை, கடற்படை பொறியாளர். ஒரு நண்பரின் மூலம் மாடலிங் துறைக்குள் நுழைந்த ஷோபிதா, 'மிஸ் ஃபோட்டோஜெனிக்', 'மிஸ் டேலண்ட்' போன்ற பட்டங்களை வென்றுள்ளார்.
Advertisment
4/5
சினிமா பின்னணி இல்லாததால், ஆடிஷன்கள் மட்டுமே திரைத்துறைக்குள் நுழைவதற்கான ஒரே வழியாக ஷோபிதாவிற்கு அமைந்தன. அதன்படி, பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் அனுராக் காஷ்யப்பின் 'ராமன் ராகவ் 2.0' என்ற திரைப்படத்தில் ஷோபிதா அறிமுகமானார்.
5/5
இதன் பின்னர், எத்தனையோ படங்களில் ஷோபிதா நடித்திருந்தாலும், 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மூலமாக தமிழ் ரசிகர்களின் கவனம் பெற்றார். ஷோபிதாவிற்கும், நடிகர் நாக சைதன்யாவிற்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.