/indian-express-tamil/media/media_files/2025/06/17/zIAO5C1PawHSFA0qTDHo.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/06/17/b5qH9hDo9CCsypttqWHE.jpg)
இன்றைய சூழலில் சினிமா நட்சத்திரங்களின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில், இந்த புகைப்படத்தில் இருக்கும் இந்த சிறுவன் இப்போது யார் என்று உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?
/indian-express-tamil/media/media_files/2025/06/17/PmczXa2ZOFN3IhgS2qZI.jpg)
இவர் வேறு யாருமில்லை; முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'தர்பார்' திரைப்படத்தில் மிரட்டல் வில்லனாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான சுனில் ஷெட்டியின் இளம் வயது புகைப்படம் தான் இது.
/indian-express-tamil/media/media_files/2025/06/17/nj1kV82KAZ0qQ5vkCSC1.jpg)
ஆனால், பாலிவுட்டில் இவர் ஒரு முன்னணி நட்சத்திரம். குறிப்பாக, இந்தியின் ஆக்ஷன் ஹீரோக்களில் இவருக்கென தனி இடம் உள்ளது. 'போர்டர்', 'தட்கன்', 'ஹேரா ஃபேரி', 'மெயின் ஹூன் நா', 'ஷூட் அவுட் அட் லோகண்ட்வாலா' போன்ற பல்வேறு ஹிட் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/06/17/Ri8jpPsLZJuj830KSNOA.jpg)
கடந்த 1992-ஆம் ஆண்டு 'பல்வான்' திரைப்படத்தின் மூலமாக தனது திரைப்பயணத்தை சுனில் ஷெட்டி தொடங்கினார். அதன் பின்னர், பாலிவுட்டின் ஆக்ஷன் ஹீரோக்கள் பட்டியலில் சுனில் ஷெட்டி இணைந்தார். 90-களில் 'தில்வாலே', 'மோஹ்ரா', 'அந்த்', 'வினாஷக்' போன்ற பல திரைப்படங்களின் மூலம் பிரபலமடைந்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/06/17/PcjnuKWBcqUHyybVSHEv.jpg)
இந்நிலையில், MX பிளேயரின் க்ரைம்-ட்ராமா நிகழ்ச்சியான 'தாராவி பேங்க்' மூலம் ஓடிடி வாயிலாகவும் தனக்கான இடத்தை சுனில் ஷெட்டி தக்க வைத்துக் கொண்டார். அமேசான் மினிடிவியில் 'ஹண்டர்: டூட்டேகா நஹி தோடேகா' என்ற மற்றொரு ஆக்ஷன் வெப் சீரிஸிலும் சுனில் ஷெட்டி இடம்பெற்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.