/indian-express-tamil/media/media_files/2025/08/17/istockphoto-485816932-612x612-1-2025-08-17-14-59-43.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/08/17/istockphoto-1138759884-612x612-2025-08-17-15-00-07.jpg)
ஊட்டிக்கு பயணிக்கும்போது நாமெல்லாம் தவறாமல் கேரட்டும் சாக்லேட்டும் வாங்குவதுண்டு, ஏனெனில் அவை இரண்டும் மிகுந்த சுவையுடன் இருக்கும். மாடித்தோட்டத்தில் உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், சின்ன வெங்காயம், தக்காளி போன்றவை வளர்க்கும் நபர்களுக்கு கேரட் வளர்ப்பு சிரமமானதாகத் தோன்றலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/08/17/istockphoto-1972381420-612x612-2025-08-17-15-00-07.jpg)
இருப்பினும், கேரட் ஊட்டி போன்ற மலைப்பகுதிகளில் மட்டுமின்றி, வீட்டு மாடித்தோட்டத்திலும் வளர்க்கக்கூடிய காய்கறியாகும். சிலர் மாடித்தோட்டத்தில் கேரட் விதைத்து, குறைந்த வளர்ச்சி அல்லது நன்கு விளைச்சல் இல்லாத காரணத்தால் அதை விட்டுவிடுவார்கள். ஆனால், கேரட்டை மாடியில் செம்மையாக வளர்த்து, அதை 10 செ.மீ உயரம் அல்லது அதற்கும் மேல் வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.
/indian-express-tamil/media/media_files/2025/08/17/istockphoto-937138126-612x612-2025-08-17-15-00-07.jpg)
கேரட்டை வளர்த்தால், அதை சுத்தமாக கழுவி பச்சையாகவே சாப்பிடலாம். கேரட் ஒரு மூன்று மாத காலத்தில் விளையும் காய்கறி ஆகும். அதிகபட்சமாக 100வது நாளுக்குள் மண்ணிலிருந்து அதை எடுத்துவிடலாம். இதையும் மஞ்சள் மற்றும் இஞ்சி போல அக்கறையுடன் பராமரிக்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/17/istockphoto-157505043-612x612-2025-08-17-15-00-07.jpg)
கேரட் வளர்ப்பில் விதைத் தேர்வும், மண்ணின் கலவையும் மிக முக்கியமானவை. 'Nantes' எனப்படும் இயற்கையான ஆரஞ்சு நிற கேரட் விதைகள் நர்சரிகளில் கிடைக்கும்; அவற்றை வாங்கி பயன்படுத்தலாம். 15 இஞ்ச் அகலமுள்ள மண் தொட்டிகள் கேரட் வளர்ப்புக்கு ஏற்றவை. இதில் சம அளவில் செம்மண், ஆற்று மணல், கோகோ பீட் மற்றும் மண் புழு உரம் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். கூடுமானால், வேப்பம்புண்ணாக்கையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/08/17/istockphoto-1256809289-612x612-2025-08-17-15-00-07.jpg)
அரை இஞ்ச் அளவிற்கு மண் வெளியே எடுத்து விதைகளை இரண்டு இஞ்ச் இடைவெளியில் நேரடி விதையில் நடவு செய்யவும். கேரட் நாற்று எடுத்து நடவு செய்யக் கூடிய காய்கறி அல்ல. மீண்டும் மண் போட்டு மூடி தண்ணீர் ஊற்றவும். விதைத்த 10 நாட்களிலேயே முளைப்பு தெரியும். முளைப்பு சரிந்திடாமல் தண்ணீர் தெளிக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/17/istockphoto-1285053305-612x612-2025-08-17-15-00-07.jpg)
நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை பஞ்ச கவ்யம் அல்லது மீன் அமிலம் தெளிக்கலாம். கேரட் முளைப்பு இடையே களை செடி இருந்தால் அவற்றை பிடுங்கி எரிந்து வளராமல் பார்த்துக் கொள்ளவும். மூன்று வாரத்தில் செடி உயர வளர்ந்திருக்கும். மக்கிய மாட்டு சாணத்தை உரமாக கொடுக்கலாம்.
/indian-express-tamil/media/media_files/MPF0XjEGtWsAOxW9toHo.jpg)
வேர் அழுகல் நோய் ஏற்படாமல் இருக்க சூடோமோனாஸ் பயன்படுத்தவும். ஒவ்வொரு முறையும் ஈரம் காய்ந்த பிறகே தொட்டியில் தண்ணீர் ஊற்றவும். விதைத்த 75 நாட்களில் இருந்து மண் கிளறி பார்த்தால் கேரட் வளர்ச்சி தெரியும். அப்புறம் என்ன ஊட்டி கேரட்டை வீட்டிலேயே வளர்த்து சமையலுக்கு பயன்படுத்துங்க.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.