காலையில் பெரும்பாலானோரின் முதல் உணவு மெது வடை தான். கடையில் டீ குடிக்கும் முன்னர் வடை சாப்பிடும் பழக்கம் பலருக்கு உண்டு. மேலும், சிலருக்கு இட்லி, தோசை, வெண்பொங்கல் சாப்பிடும்போது கூடவே வடை இருக்க வேண்டும்.
2/7
ஆனால் இந்த வடை சில நேரம் கெட்டியாக இருக்கும். அல்லது அதிக எண்ணெய்யுடன் இருக்கும். இதற்கு காரணம் மாவை பக்குவமாக அரைக்காதது தான். இதற்கு செஃப் தீனா தன்னுடைய யூடியூப் வீடியோவில் மாவு எப்படி சரியாக அரைப்பது என்று விளக்கம் அளித்துள்ளார்.
3/7
தேவையான பொருட்கள்
உளுந்து – 250 கிராம், வெங்காயம் – 1 (பெரியது), பச்சை மிளகாய் – 2, இஞ்சி (நறுக்கியது) – 1 டீஸ்பூன், பெருங்காயம் – ¼ டீஸ்பூன், சீரகம் – ½ டீஸ்பூன், மிளகு – ¼ டீஸ்பூன், கொத்தமல்லி – தேவையான அளவு, கறிவேப்பிலை – தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு
Advertisment
4/7
முதலில் உளுந்தை 6-7 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். நன்றாக ஊறிய பின்னர் தண்ணீரை வடித்துவிட்டு கிரைண்டரில் போட்டு அரைக்க வேண்டும். 20 நிமிடம் அரைத்தப் பின்னர் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். மாவு கெட்டியாக வரும்போது தண்ணீரை ஊற்றாமல் சிறிது சிறிதாக தெளிக்க வேண்டும்.
5/7
மாவு பதத்திற்கு வந்தப் பின்னர் எடுத்து பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அதை நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும். அப்போது தான் வடை கெட்டியாக வராது.
6/7
இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், மிளகு, பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயம், உப்பு சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும்.
Advertisment
Advertisements
7/7
பின்னர் அடுப்பில் எண்ணெய்ச் சட்டி வைத்து, எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும், வடை போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான் டேஸ்டியான வடை ரெடி!