இன்று (ஆக.22) சென்னை தினம். சென்னை தன் '385' வயதை எட்டியிருக்கும் சூழலில் மாநகர் முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சிறு மீனவக் கிராமமாக இருந்த சென்னபட்டணம் ஆங்கிலேயர்களின் வரவால் அடையாளம் பெற்று, இன்றைக்கு உலகப் பெருநகரங்களில் ஒன்றாகப் பரிணமித்திருக்கிறது.
வரலாற்றின் படி, சென்னப்ப நாயகர் உள்ளிட்ட சிலரின் நிலங்களை வாங்கி அதில் சென்னை மாநகரத்தை அமைப்பதற்கான அனுமதி பத்திரம் கையெழுத்திடப்பட்ட நாளே சென்னை நாளாக கொண்டாடப்படுகிறது
இந்த நாளில் நீங்கள் இதுவரை பார்க்காத சென்னையில் சில அரிய பழைய புகைப்படங்கள் இங்கே..
வருடாந்திர விழாவின் ஒரு பகுதியாக, அலங்கரிக்கப்பட்ட ஆதிபுரீஸ்வரர் சிலை, பெரியபுராணம் முழங்க சிந்தாதிரிப்பேட்டையின் முக்கிய வீதிகளில் வலம் வந்தபோது.. Photo: வி.ராமமூர்த்தி
மெட்ராஸ் உயர் நீதிமன்றம்
சென்ட்ரல் ரயில் நிலையம்
தியாகராய நகர் அன்று
மவுண்ட் ரோடு
மெட்ராஸில் சைக்கிள் ரிக்ஷாவில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள். (ஜூலை 10, 1979) Credit: கே.என். சாரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.