சென்னையில் இன்று காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.52,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஆக.15) சவரன் ரூ.52,440-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,555-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் இன்று (ஆக.16) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.52,520-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.10 உயர்ந்து ரூ.6,565-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.89-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.89,000-க்கும் விற்பனையாகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.