/indian-express-tamil/media/media_files/2025/08/18/screenshot-2025-08-18-161940-2025-08-18-16-21-36.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/08/18/screenshot-2025-08-18-161945-2025-08-18-16-21-56.png)
தேவையான பொருட்கள்
சிக்கன்: 1 கிலோ (சிறு துண்டுகளாக நறுக்கியது), சின்ன வெங்காயம்: 1 கப் (நறுக்கியது), தக்காளி: 2 (நறுக்கியது), இஞ்சி பூண்டு விழுது: 2 தேக்கரண்டி, கறிவேப்பிலை: 2 கொத்து, கொத்தமல்லி: சிறிதளவு (நறுக்கியது), செட்டிநாடு மசாலா பொடி: 3-4 தேக்கரண்டி (உங்கள் காரத்திற்கு ஏற்ப), எண்ணெய்: தேவையான அளவு, உப்பு: தேவையான அளவு, தண்ணீர்: தேவையான அளவு.
/indian-express-tamil/media/media_files/2025/08/18/screenshot-2025-08-18-161954-2025-08-18-16-21-56.png)
பொடி அரைக்க தேவையான பொருட்கள்
வரமிளகாய் - 50 கிராம் சீரகம் - 10 கிராம் சோம்பு - 10 கிராம் மிளகு - 10 கிராம் மல்லி - 25 கிராம்
/indian-express-tamil/media/media_files/2025/08/18/screenshot-2025-08-18-162000-2025-08-18-16-21-56.png)
செய்முறை
சிக்கனை நன்கு சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/18/screenshot-2025-08-18-162008-2025-08-18-16-21-56.png)
வதக்கிய வெங்காயத்தில் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். நறுக்கிய தக்காளியை சேர்த்து, தக்காளி மசியும் வரை வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/18/screenshot-2025-08-18-162118-2025-08-18-16-21-56.png)
செட்டிநாடு மசாலா பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும். சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனை இந்த மசாலாவில் சேர்த்து நன்கு பிரட்டவும்.
/indian-express-tamil/media/media_files/2025/05/17/V5zojg2GaFQb1tcDTp5g.jpg)
சிக்கன் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, மூடி போட்டு வேக விடவும். இடையிடையே கிளறி விடவும். சிக்கன் நன்கு வெந்ததும், கொத்தமல்லி தூவி அலங்கரித்து, சூடாக பரிமாறவும்.
/indian-express-tamil/media/media_files/2025/05/17/tXpYtUv9dbLKGSWT5pgj.jpg)
இந்த போடி சிக்கன் செய்வதற்கு அந்த போடி தான் மிகவும் முக்கியமான விஷயம்.
/indian-express-tamil/media/media_files/2025/08/18/screenshot-2025-08-18-161940-2025-08-18-16-21-36.jpg)
இதை சூடான சாதத்துடன் அல்லது இட்லி, தோசை என்று எது வேண்டுமானாலும் வைத்து சாப்பிடலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.