/indian-express-tamil/media/media_files/2025/05/17/3Mt0HpMJ15vIGdrQUZq1.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2021/08/tamil-indian-express-2021-08-12T222014.594.jpg)
அசைவ உணவுகளுக்கு பெயர் போன செட்டிநாடு ஸ்டைலில் சுவையான சிக்கன் மசாலா எப்படி செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள். மேலும் இந்த சிக்கன் மசாலாவை தொக்கு போல் செய்து சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம் அல்லது ட்ரையாக பிரட்டி சாம்பார், ரசத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/05/17/tXpYtUv9dbLKGSWT5pgj.jpg)
செய்ய தேவையானவை :
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மிளகு தூள் - 1 டீஸ்பூன் வெங்காய விழுது அரைக்க தேவையான பொருட்கள் : பெரிய வெங்காயம் - 3 பச்சை மிளகாய் - 3 இஞ்சி - 1 துண்டு பூண்டு பற்கள் - 10 கொத்தமல்லி விதைகள் - 1 டேபிள் ஸ்பூன் கருப்பு மிளகு - 10 தேங்காய் விழுது அரைக்க தேவையானவை : துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் கசகசா - 1 டேபிள் ஸ்பூன் சோம்பு - 1 டீஸ்பூன் தாளிக்க தேவையானவை : எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் பிரியாணி இலை - 1 பட்டை - 1 ஏலக்காய் - 2 சோம்பு - 1/2 டீஸ்பூன் கிராம்பு - 3 கறிவேப்பிலை - சிறிதளவு மற்ற பொருட்கள் : பெரிய வெங்காயம் - 1 பழுத்த தக்காளி - 1 பூண்டு பற்கள் - 5 உப்பு - தேவையான அளவு
/indian-express-tamil/media/media_files/2025/05/17/kw2XUD5OWKk3ToM7rg6Q.jpg)
முதலில் சிக்கனை நன்றாக அலசி தண்ணீர் இல்லாமல் ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் தயிர், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மிளகு தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிரட்டி குறைந்தது ஒரு மணி நேரம் ஊறவிடவும். தற்போது அரைப்பதற்கு கொடுத்துள்ள பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி விதைகள் மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியான பேஸ்ட்டாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/2025/05/17/V5zojg2GaFQb1tcDTp5g.jpg)
பின்னர் மிக்ஸியில் துருவிய தேங்காய், சோம்பு மற்றும் கசகசா ஆகியவற்றை சேர்த்து நன்கு மென்மையாகவும், கெட்டியாகவும் அரைத்துக் தனியே வைத்துக்கொள்ளுங்கள். தற்போது அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/05/17/cuNTkdrxylQlRxmHq6pm.jpg)
பின்பு அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பொடியாக நறுக்கிய பூண்டு பற்கள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட்டை சேர்த்து 5 நிமிடங்களுக்கு கலந்து வதக்கிக்கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/2025/05/17/B7Kpn55Ku90HzbQTm7ww.jpg)
பின்னர் அதில் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பிறகு அதில் ஊறவைத்த கோழியை சேர்த்து குறைந்த தீயில் 6 நிமிடங்களுக்கு நன்றாக பிரட்டி சமைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/05/17/RjPcdsrsVP55QY4S5ePf.jpg)
அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கிளறி மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு வேகவிடவும். பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கடாயை மூடி 15-20 நிமிடங்களுக்கு கோழியை வேகவிடவும். சிக்கன் மென்மையாக வெந்தவுடன் இறக்கினால் சுவையான செட்டிநாடு சிக்கன் மசாலா சாப்பிட ரெடி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.