/indian-express-tamil/media/media_files/2025/08/28/screenshot-2025-08-28-160020-2025-08-28-16-04-49.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/08/28/screenshot-2025-08-28-160026-2025-08-28-16-05-06.png)
கோயம்புத்தூரில், சாதம் முதல் தோசை வரை அனைத்து உணவுகளுக்கும் சிறந்த சைடிஷாக சிக்கன் சிந்தாமணி விரும்பப்படுகிறது, குறிப்பாக தயிர் சாதத்துடன்.
/indian-express-tamil/media/media_files/2025/08/28/screenshot-2025-08-28-160031-2025-08-28-16-05-06.png)
மசாலா இல்லாமல் மிளகாயின் சுவையுடன் மண் சட்டியில் சமைக்கப்படும் சிக்கன் சிந்தாமணி, உடலுக்கு சுடாமலும், சுவையிலும் சிறந்தது. இவ்வாரம் செய்து பார்த்தால் வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/28/screenshot-2025-08-28-160038-2025-08-28-16-05-06.png)
தேவையான பொருட்கள்
நாட்டுக்கோழி - 1 கிலோ, கடலை எண்ணெய் - 50 மிலி, கறிவேப்பிலை - தேவையான அளவு, சின்ன வெங்காயம் -150 கிராம், சிவப்பு மிளகாய் - 150 கிராம், உப்பு - தேவையான அளவு, பூண்டு - 5, தக்காளி - 1, பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் - 1 கைபிடி அளவு, சீரகம் - 1 ஸ்பூன், நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்.
/indian-express-tamil/media/media_files/2025/08/28/screenshot-2025-08-28-160103-2025-08-28-16-05-06.png)
சிக்கன் சிந்தாமணியை மண்சட்டியில் சமைத்தால் மட்டுமே அதன் பாரம்பரிய சுவை கிடைக்கும். நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பூண்டை தோல் நீக்கி இடித்துகொள்ளவும். சீரகத்தை இடித்து வைக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/28/screenshot-2025-08-28-160110-2025-08-28-16-05-06.png)
அடுப்பில் சட்டியை வைத்து அதில் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாயை போட்டு வறுக்கவும். அடுத்து சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் இடித்த பூண்டை சேர்த்து வதக்கவும். பின்பு நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/28/screenshot-2025-08-28-160020-2025-08-28-16-04-49.jpg)
தக்காளி வதங்கியதும் நாட்டுக்கோழியை சேர்த்து நன்கு கலந்து விடவும். தேவையான அளவு உப்பு சேர்த்து விட்டு, காரமும் சரியாக இருக்கிறதாக என ஒருமுறை ருசிப்பார்க்கவும். பிறகு தண்ணீர் சேர்த்து சிக்கனை 15 நிமிடம் வேக வைக்கவும். இப்போது இளசான தேங்காய் துண்டுகள், இடித்த சீரகம் சேர்த்து நன்கு கிளறவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/03/honey-garlic-chicken-2025-08-03-11-45-17.jpg)
மீண்டும் 15 நிமிடத்திற்கு சிக்கனை சுண்ட வேக விடவும். இறுதியாக நல்லெண்ணெய் சேர்த்து கறிவேப்பிலையை தாவவும். அடுப்பை அணைத்து விட்டு சுடச்சுட பரிமாறலாம். சுவையான கொங்குநாடு ஸ்பெஷல் சிக்கன் சிந்தாமணி தயார்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.