/indian-express-tamil/media/media_files/2025/03/01/OFuwuJCmHBWm6ruQiQ92.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/03/01/DyXv2DOYdGPFaxNQSfWS.jpg)
இலவங்கப்பட்டையை உட்கொள்வது எடையைக் குறைப்பதில் இருந்து நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது வரை அனைத்திற்கும் உதவும். குறிப்பாக, ஆண்களுக்கு இவை பெரிதும் உதவுகின்றன. அசைவ சமையல் மட்டுமல்லாமல், சைவம் சார்ந்த சமையல்களில் நாம் அவ்வபோது பயன்படுத்தும் இலவங்கப் பட்டை ஆண்களுக்கு மகத்தான பலன்களை கொடுக்கக் கூடியவை.
/indian-express-tamil/media/media_files/2025/03/01/Kkus9oQ6b5Td3WcREQ7T.jpg)
இலவங்கப்பட்டையை அப்படியே நேரடியாகவோ அல்லது தூள் செய்தோ சமையலில் சேர்த்துக் கொள்ளலாம். பல நாடுகளில் இலவங்கப் பட்டை விளைகிறது என்றாலும் கூட, சிலோன் லவங்கம் எனப்படும் இலங்கையில் விளையும் பட்டை தனித்துவமான சுவை மற்றும் மணம் ஆகியவற்றைக் கொண்டது ஆகும்.
/indian-express-tamil/media/media_files/2025/03/01/dRPFJqEimR5lda6Gs7b1.jpg)
இலவங்கப் பட்டையில் மெக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரதம், கால்சியம், மேங்கனீஸ், காப்பர், ஜிங்க், விட்டமின்கள், நியாசின், தியமின் மற்றும் லைகோபீன் என எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
/indian-express-tamil/media/media_files/2025/03/01/xHKKo2FIC6iH14A3uTob.jpg)
மேலும், அதிக ஆன்டி-ஆக்ஸிடண்ட் சத்து கொண்ட இலவங்கப் பட்டை, உடலில் சேரும் பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்றவற்றை எதிர்த்துப் போராடும் குணம் கொண்டது. எனினும், இலவங்கப் பட்டை அதிக சூடு மற்றும் காரத்தன்மை கொண்டது என்பதையும், இதை மிக அதிகமாக எடுத்துக் கொண்டால் பின்விளைவுகள் ஏற்படும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/03/01/9xDGN4iV712E9sHuUkBk.jpg)
ஆண்கள் பொதுவாக எதிர்கொள்ளும் மலட்டுத்தன்மை பிரச்சினைக்கு இது தீர்வாக அமையும். பால் அல்லது வெதுவெதுப்பான தண்ணீரில் இலவங்க தூள் கலந்து சாப்பிடலாம். இது தவிர சாலட், ஜூஸ், தயிர், காய்கறிகள் அல்லது சூப் ஆகியவற்றிலும் சேர்த்துக் கொள்ளலாம். நீங்கள் உடல் ரீதியாக பலவீனமாகவோ அல்லது ஆற்றல் குறைந்தவராகவோ உணர்ந்தால், தொடர்ந்து இலவங்கம் எடுத்துக் கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us