New Update
/indian-express-tamil/media/media_files/2025/08/04/screenshot-2025-08-04-120233-2025-08-04-12-28-59.jpg)
பிரபல சமையல் ரியாலிட்டி ஷோவான குக்கு வித் கோமாளி சீசன் 6 இல் சினிமா தீம் உள்ள எபிசோடில் நடிகை சரோஜா தேவி போல் வந்து அசத்திய பிரபலம் யார் என்று தெரியுமா? அவரை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
பிரபல சமையல் ரியாலிட்டி ஷோவான குக்கு வித் கோமாளி சீசன் 6, அதன் வரவிருக்கும் எபிசோடில் சினிமா தீம் இடம்பெறவுள்ளது. அதில் நடிகை சௌந்தரியா நஞ்சுண்டன் மூத்த நடிகை சரோஜா தேவியை போல் உடையை அணிந்து வரவிருக்கிறார்.
சரோஜா தேவியின் தனித்துவமான முகபாவனைகள் மற்றும் பழக்கவழக்கங்களைப் பின்பற்றி, ஒரு அழகிய புடவையை அணிந்து, சௌந்தரியா ஒரு நகைச்சுவையான மற்றும் மனதைத் தொடும் அளவிற்கு பெர்போர்ம் செய்துள்ளார்.
அவரது இந்த கெட் அப் ஏற்கனவே சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் அவரது உருமாற்றம் மற்றும் நகைச்சுவை டைமிங்கை பாராட்டியுள்ளனர்.
படப்பிடிப்புத் தளத்திலிருந்து ஒரு முன்னோட்டத்தைப் பகிர்ந்து கொண்ட சௌந்தரியா, சமூக ஊடகங்களில், "சரோஜா தேவி அம்மாவின் பசுமையான அழகைப் பார்த்து பெருமைப்பட்டேன், ஏக்கம் நிறைந்த உணர்வு ஏற்பட்டது, என்னால் முடிந்ததைச் செய்ய முயற்சித்தேன் " என்று எழுதி சில புஹிப்படங்களை ஷேர் செய்துள்ளார்.
அந்த புகைப்படங்களில் அதில் பங்கேற்கும் மற்ற கோமாளிகளும் பல வேடங்களில் உள்ளனர்.
பிக் பாஸ்ஸை தொடர்ந்து இந்த மகிழ்ச்சிகரமான சிறப்புத் தோற்றத்தின் மூலம், சௌந்தரியா மீண்டும் தனது பல்துறை திறனையும் வசீகரத்தையும் நிரூபித்துள்ளார்.
இதனால் குக்கு வித் கோமாளி 6 இல் அவரது முழு நடிப்பையும் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.