/indian-express-tamil/media/media_files/2025/01/12/BLzzpTa5rulucYuA40ZN.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/01/11/vUARMAiJiIp9FQdIE6Jw.jpg)
பலகார வகைகளில் முக்கிய இடத்தைப் பிடிப்பது மெதுவடை என்றால் நிச்சயம் மிகையாகாது. பண்டிகை காலங்களில் இவற்றுடன் சேர்த்து கொடுக்கும் சட்னி வேற லெவல் டேஸ்டாக இருக்கும். தவிர, மொறுமொறுப்பாக இருக்கும் இந்த மெதுவடையை சில சமயங்களில் எந்தவித சைடிஷ் இல்லாமலேயே ருசிக்கலாம்.
/indian-express-tamil/media/media_files/2024/12/15/EMQU0NEP6J1syEBkJtgH.jpg)
இந்த அற்புதமான வடையில் உளுந்து சேர்க்கப்படுகிறது. அவை உடலின் ஆரோக்கியத்திற்கும் உறுதிக்கும் உதவுகின்றன. குறிப்பாக எலும்புகளுக்கு நல்ல வலு தருகின்றன.
/indian-express-tamil/media/media_files/2024/10/16/nfuqA2CicpYXBAq3doBw.jpg)
மெதுவடை செய்யத் தேவையான பொருட்கள்:
உளுந்து-250கிராம் சிறிய உருளைக்கிழங்கு-1 (வேக வைத்து, தோல் உரித்தது) இஞ்சி-சிறிதளவு (பொடியாக நறுக்கியது) மிளகு,சீரகம்-1/4 ஸ்பூன் பெருங்காயம்-2 சிட்டிகை வெங்காயம்-1 (பொடியாக நறுக்கியது) பச்சைமிளகாய்-1 (பொடியாக நறுக்கியது) சோடா உப்பு-1 சிட்டிகை கருவேப்பிலை- 1 கொத்து அரிசி மாவு-1 டேபிள்ஸ்பூன்
/indian-express-tamil/media/media_files/2025/05/01/VxeciC4q9Wetfuphwunu.jpg)
முதலில் உளுந்தை நன்கு அலசிவிட்டு அவற்றுடன் தண்ணீர் சேர்த்து சுமார் 1 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் ஒரு மிக்சியில் ஊற வைத்திருக்கும் உளுந்தம் பருப்பை அதில் இட்டு அரைத்து கொள்ளவும். அவை 50 சதவிகிதம் நன்றாக அரைந்து இருக்கும் போது வேக வைத்து தோலுரித்துள்ள உருளைக்கிழங்கை மசித்து அந்த மாவில் சேர்த்து கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/2025/05/01/yERAKVKSQqAsjEoBDw2f.jpg)
மாவு வடை சுடும் பதத்திற்கு நன்கு அரைத்தததும், ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்துகொள்ளவும். இப்போது அரைத்து வைத்துள்ள வடை மாவுடன் இஞ்சி, மிளகு, சீரகம், பெருங்காயம், வெங்காயம், பச்சைமிளகாய், சோடா உப்பு, கருவேப்பிலை, அரிசி மாவு, தேவையான அளவு உப்பு ஆகிய்வற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து மாவை நன்கு கலந்து கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/2025/05/01/nCtXegF48Diw2hpg7VZG.jpg)
தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அவற்றில் அரைத்துவைத்துள்ள மாவை கையில் வாழை இலை வைத்து வடை வடிவில் தட்டி எண்ணெயில் இட்டு பொரித்துக் எடுக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/05/01/t214za1jq8pp76SHuiGS.png)
இப்போது நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த தீபாவளி பலகாரமான மெதுவடை தயாராக இருக்கும். அவற்றை தேங்காய் அல்லது தக்காளி சட்னிகளுடன் சேர்த்து ருசித்து மகிழவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.