/indian-express-tamil/media/media_files/OcA1200eQ0DR0KtpXKDV.jpg)
புதிதாக யூடியூப் சேனல் தொடங்கினார் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ .
/indian-express-tamil/media/media_files/9L8bQhR2ZpetUmpSZvXx.jpg)
சர்வதேச கால்பந்து அரங்கில் நட்சத்திர வீரராக ஜொலித்து வருபவர் போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
/indian-express-tamil/media/media_files/AzTCplp8zWV6yHGauVfB.jpg)
39 வயதான ரொனால்டோ தற்போது போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டனாகவும், அல்-நாசர் எஃப்.சி அணியின் முன்னணி வீரராகவும் களமாடி வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/gAolnf2efhPPHVwhwYQv.jpg)
இந்நிலையில், கால்பந்து வீரர் ரொனால்டோ தற்போது யூட்யூபராக புது அவதாரம் எடுத்துள்ளார். 'யுஆர் கிறிஸ்டியானோ' என்ற புதிய யூடியூப் சேனலை அவர் தொடங்கியுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/pg15j5v0I48ncCSsobCe.jpg)
இது தொடர்பான அறிவிப்பு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ரொனால்டோ.
/indian-express-tamil/media/media_files/Yf5p6F0RWN7QMl7mFwya.jpg)
அந்த வீடியோவில், "நான் யுஆர் கிறிஸ்டியானோ என்ற பெயரில் யூட்யூப் சேனல் ஆரம்பித்துள்ளேன். அதை அனைவரும் சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள்" என்று காமெடியாக பேசியுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/9PnXFkQe5zyySjzz63HZ.jpg)
ரொனால்டோவின் யூட்யூப் சேனலை 1 மணிநேரத்திற்குள் 1 மில்லியன் பேர் சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர். இதுவரை இந்த சேனலில் 18 வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.