/indian-express-tamil/media/media_files/2025/07/19/download-2025-07-19-12-24-36.jpg)
/indian-express-tamil/media/media_files/pHHdVmDWAmGHZgnEzAMr.jpg)
எங்கு பார்த்தாலும் சிலர் சீரகத் தண்ணீர் குடிங்க, சோம்பு தண்ணி குடிங்க, லவங்கப்பட்டை டீ குடிங்க என்று சொல்வார்கள். இந்த மூன்றுமே உடல் எடையைக் குறைக்க உதவி செய்யும் தான். ஆனால் எது பெஸ்ட் ரிசல்ட் தரும் என்று தெரியாது. அதைப் பற்றி தான் இங்கு தெர்யுந்துகொள்வோம்.
/indian-express-tamil/media/media_files/u7qYs49zpQgpNOP2kenD.jpg)
சீரகம் இயற்கையாகவே குளிர்ச்சித் தன்மை பொருந்தியவை. உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. அதனால் இந்த சீரகத் தண்ணீரை எடுத்துக் கொள்ளும்போது வயிற்றின் பிஎச் அளவை சமநிலையில் வைத்திருக்க உதவி செய்யும்.
/indian-express-tamil/media/media_files/UDTRcdzJrxyEHxKwfmkk.jpg)
சீரகத் தண்ணீரை குடிப்பதால் அஜீரணக் கோளாறு, நெஞ்செரிச்சல், வயிறு உப்பசம் உள்ளிட்ட பிரச்சினைகளை சரிசெய்யவும் வராமல் தடுக்கவும் முடியும். உடல் எடையைக் குறைப்பதற்கு உடலின் ஜீரணிக்கும் பண்பு சரியாக இருக்க வே்ணடும். அதற்கு சீரகத் தண்ணீர் உதவி செய்யும்.
/indian-express-tamil/media/media_files/XCt5eZhM6XvtBBo0wzql.jpg)
சீரகத் தண்ணீரைத் தினமும் குடித்து வரும்போது, உடலில் நீர்க்கோர்ப்பது தவிர்க்கப்படும். அதோடு இன்சுலின் சென்சிடிவிட்டியையும் அதிகரிக்கச் செய்யும்.
/indian-express-tamil/media/media_files/2024/11/13/y7tXLdiJ7A808McewDZj.jpg)
மேலும் சீரகத்தில் உள்ள ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள் உடலின் மெட்டபாலிசத்தை சீர்செய்து, ஒட்டுமொத்த உடலிலும் உள்ள தேவையில்லாத கொழுப்பைக் கரைக்கச் செய்யும்.
/indian-express-tamil/media/media_files/WmGSAANJRnnsMDygLA29.jpg)
உடல் எடையை ஆரோக்கியமான முறையில் சீராகக் குறைப்பதற்கு சோம்பு மிகச்சிறந்த மூலிகைகளில் ஒன்று என்று சொல்லலாம். சோம்பில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் உடல் எடையைக் குறைக்க உதவி செய்யும். நீண்ட நேரம் நிறைவாக வைத்திருப்பதோடு பசியைக் கட்டுப்படுத்தி அதிக கலோரிகள் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க உதவும்.
/indian-express-tamil/media/media_files/oT0Yu5nPLZStkn3gBqVV.jpg)
குறிப்பாக சோம்பு தண்ணீர் குடிப்பது சுகர் கிரேவிங்கைத் தடுக்கும். பகலில் டீ உணவு இடைவேளைக்கு நடுவே ஒரு டம்ளர் சோம்புத் தண்ணீர் குடித்தால் நாள் முழுக்க சர்க்கரை சேர்த்த உணவுகள் எடுத்துக் கொள்வதைத் தடுக்க முடியும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/19/istockphoto-853375152-612x612-2025-07-19-12-20-19.jpg)
சோம்புத் தண்ணீரில் உள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் ரத்தத்தை சுத்திகரிக்க உதவி செய்கிறது. சோம்புவுக்கு கண் பார்வையை மேம்படுத்தும் ஆற்றலும் உண்டு. ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருப்பதோடு உடலில் உள்ள கெட்ட கொலஸ்டிராலையும் குறைத்து, உடல் எடையைக் குறைப்பதோடு இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/19/istockphoto-1150386124-612x612-2025-07-19-12-20-19.jpg)
எல்லாவற்றையும் விட அஜீரணக் கோளாறு, வயிறு உப்பசம், மலச்சிக்கல் ஆகியவற்றை சரிசெய்து, தொப்பையையும் உடல் எடையையும் குறைக்கச் செய்யும்.
/indian-express-tamil/media/media_files/JJWcslUngX46ZOQeSjtj.jpg)
எது சிறந்தது?
அஜீரணம், வாயு மற்றும் வயிற்றுப் பிடிப்புகளுக்கு உடனடி நிவாரணம் தேடுபவர்களுக்குச் சீரக நீர் சிறந்தது. இது செரிமான நொதிகளைத் தூண்டுவதில் அதிக கவனம் செலுத்துகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/07/19/istockphoto-2155609784-640x640-2025-07-19-12-22-18.jpg)
வாயு, வீக்கம் மற்றும் வாய் துர்நாற்றம் உள்ளவர்களுக்குச் சோம்பு நீர் சிறந்த தேர்வாக இருக்கும். இது தசைப்பிடிப்புகளைத் தளர்த்தி, செரிமான மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது.
/indian-express-tamil/media/media_files/2UaEqaMu48HszbtCTanc.jpg)
உங்கள் தனிப்பட்ட தேவை மற்றும் உடல்நிலைக்கேற்ப இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யலாம். இரண்டுமே பொதுவாகப் பாதுகாப்பானவை. சிறந்த பலன்களுக்கு, தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் சீரக நீர் அல்லது சோம்பு நீர் அருந்தலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.