/indian-express-tamil/media/media_files/2025/05/09/5waQ4QzTpLWUPihDJEDi.jpg)
/indian-express-tamil/media/media_files/2024/10/20/oKLsMevk1kXmhmGsArrv.jpg)
வெந்தய கீரை பொடுகு (dandruff) க்கு ஒரு நல்ல வீட்டு வைத்தியம். வெந்தய கீரையை அரைத்து, தலைமுடியிலும், தலையிலும் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், பொடுகு குறையும். வெந்தய கீரை எப்படி பொடுகுக்கு உதவுகிறது? வெந்தய கீரை தலைமுடியை வலுப்படுத்தும், வெந்தய கீரை முடி உதிர்தலைத் தடுக்கிறது, வெந்தயத்தில் உள்ள எண்ணெய்ப் பசை தலைமுடிக்கு நல்ல பளபளப்பை தருகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/05/09/B20F4qZ0akczYFNHrtMW.png)
வேப்பங்கொட்டை பொடுகுத் தொல்லையை நீக்க ஒரு நல்ல வீட்டு வைத்தியம். வேப்பங்கொட்டையை அரைத்து விழுதாக்கி, தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து அலசினால் பொடுகு குறையும். வேப்ப எண்ணெயையும் பொடுகுக்கு பயன்படுத்தலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/04/08/Tgyr9bAslE8aTAt30bz0.jpg)
மிளகு பொடுகுக்கு ஒரு சிறந்த தீர்வாகக் கருதப்படுகிறது. மிளகு தூளை தயிருடன் கலந்து தலையில் தடவி 1/2 மணி நேரம் கழித்து அலசி வரலாம். அதேபோல், ஆலிவ் எண்ணெயுடன் மிளகு தூள் கலந்து உச்சந்தலையில் மசாஜ் செய்து, அரை மணி நேரம் கழித்து அலசலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/04/29/GpQvJyZ2YDoBekK2R8Ig.jpg)
நல்லெண்ணெய் பொடுகை நீக்க ஒரு நல்ல தீர்வாக இருக்கிறது. வாரத்தில் ஒருமுறை நல்லெண்ணெயை தலையில் தடவி மசாஜ் செய்து குளித்தால் பொடுகுத் தொல்லை குறையும், தலைப்பகுதிக்கும் நல்ல சத்தமும் கிடைக்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/02/18/xMWm5IjCrBiGRekZm8yj.png)
ஆவாரம்பூ பொடுகை குறைக்க உதவுகிறது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆவாரம்பூவின் மருத்துவ குணங்கள், தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பொடுகை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
/indian-express-tamil/media/media_files/2024/10/17/JGEXPhDs30rrEWcWAXCy.jpg)
நெல்லிக்காய் பொடுகைக் குறைக்க உதவுகிறது. நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் பொடுகைக் கட்டுப்படுத்தவும், மயிர்க்கால்களை வலுப்படுத்தவும் உதவுகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.