/indian-express-tamil/media/media_files/2025/07/09/screenshot-2025-07-09-214914-1-2025-07-09-21-49-38.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/08/istockphoto-1281543304-612x612-1-2025-07-08-15-54-18.jpg)
ஒரு திரைப்படம் வெளியான பிறகு, சில வருடங்கள் கழித்து, மீண்டும் திரையரங்குகளில் வெளியிடுவது ரீ-ரிலீஸ் எனப்படும். சமீப காலமாக, தமிழ் சினிமாவில் இந்த ட்ரெண்ட் அதிகரித்து வருகிறது. பழைய திரைப்படங்களை மீண்டும் வெளியிடுவதன் மூலம், ரசிகர்கள் தங்கள் விருப்பமான படங்களை பெரிய திரையில் பார்க்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். மேலும், அந்த படங்கள் வசூல் ரீதியாகவும் வெற்றி பெறுவதால், தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் இந்த முயற்சியை மேற்கொள்கின்றனர்.
/indian-express-tamil/media/media_files/2025/07/04/dhanush-5-2025-07-04-15-56-24.jpg)
அந்த வகையில் தற்போது நடிகர் தன்ஷின் இரண்டு திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/07/09/screenshot-2025-07-09-215123-2025-07-09-21-51-52.png)
இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் - சோனம் கபூர் நடித்த 'ராஞ்சனா' என்ற திரைப்படம் கடந்த 2013-ம் ஆண்டில் வெளியாகி 'ஹிட்' அடித்து, ரூ.100 கோடி வசூலில் இணைந்தது. தமிழில் 'அம்பிகாபதி' என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
/indian-express-tamil/media/media_files/2025/07/09/screenshot-2025-07-09-215129-2025-07-09-21-51-52.png)
நடுத்தர வர்க்கத்து இளைஞனின் ஒரு தலைக்காதலைச் சொல்லும் இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்களும் கவனம் ஈர்த்தன.
/indian-express-tamil/media/media_files/2025/07/09/screenshot-2025-07-09-215139-2025-07-09-21-51-52.png)
இதற்கிடையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு 'அம்பிகாபதி' படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் முழுப்படமும் மெருக்கேற்றப்பட்டு, 4கே தரத்தில் நவீன அட்மாஸ் சவுண்ட் வடிவமைப்புடன், புதிய டிஜிட்டல் பதிப்பாக தனுசின் பிறந்தநாளையொட்டி (ஜூலை 28), அப்ஸ்விவிங் என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தமிழகத்தில் இப்படத்தை ஆகஸ்டு 1-ந்தேதி வெளியிடுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/07/09/screenshot-2025-07-09-215340-2025-07-09-21-54-02.png)
அடுத்ததாக இந்த மாத இறுதியில் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தம்பி தனுஷ் நடித்த 'புதுப்பேட்டை' படம் ரீ ரிலீஸ் ஆக உள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/07/09/screenshot-2025-07-09-215352-2025-07-09-21-54-02.png)
தனுஷ், சினேகா, சோனியா அகர்வால் நடித்த அந்த படத்தின் காட்சிகளும், யுவன்ஷங்கர்ராஜா இசையும் இன்றும் பாராட்டப்படுகின்றன. அந்த படத்தை புத்தம்புது பொலிவுடன் வெளியிட உள்ளனர்.
/indian-express-tamil/media/media_files/2025/07/04/dhanush-4-2025-07-04-15-56-08.jpg)
திடீரென தனுஷ் படங்கள் ரீ ரிலீஸ் ஏன் என்று விசாரித்தால், வரும் 28ம் தேதி தனுசுக்கு 42வது பிறந்தநாள். அதை கொண்டாடவே இந்த ஏற்பாடுகளாம். அடுத்ததாக தனுஷ் நடிப்பில் அக்டோபர் 1ம் தேதி 'இட்லிகடை' வர உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.