நிம்மதி தூக்கம்... உங்க பெட் ரூமில் இந்த செடிகள் வச்சுப் பாருங்க!
சில வகையான செடிகளை நமது வீட்டிற்குள்ளே வைத்து வளர்க்க முடியும். அந்த வகையில், வீட்டினுள் வைத்து வளர்க்கக் கூடிய சில செடியின் வகைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சில வகையான செடிகளை நமது வீட்டிற்குள்ளே வைத்து வளர்க்க முடியும். அந்த வகையில், வீட்டினுள் வைத்து வளர்க்கக் கூடிய சில செடியின் வகைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நிம்மதியான தூக்கம் என்பது எல்லோருக்குமே இன்றியமையாதது. அந்த வகையில், நமது தூக்கத்தை மேம்படுத்தக் கூடிய சில வகையான செடிகளை இந்தக் குறிப்பில் காணலாம். இவற்றை வீட்டிற்குள் வைத்து நம்மால் வளர்க்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு.
2/6
பீஸ் லில்லி (Peace Lily): உங்கள் படுக்கை அறைக்குள் வளர்ப்பதற்கு ஏற்ற செடியாக இது விளங்குகிறது. இந்த செடியின் கண்ணாடி போன்ற இலைகள், உங்களுக்கு அமைதியான மனநிலையை ஏற்படுத்தி கவலைகளை குறைப்பதாக கூறப்படுகிறது.
3/6
ஆரோஹெட் (Arrow Head): பார்ப்பதற்கு அம்புக் குறி போன்று இருப்பதால், இதனை ஆரோஹெட் (Arrow Head) என்று கூறுகின்றனர். இது காற்றை சுத்தப்படுத்தி, வீட்டில் இருக்கும் நச்சுகளை அகற்ற உதவுவதாக கூறுகின்றனர். இதனை அலங்காரத்திற்காகவும் பலர் வளர்க்கின்றனர்.
Advertisment
4/6
அரிக்கா பால்ம் (Areca Palm): அழகிற்காக செடி வளர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள், அரிக்கா பால்ம்-ஐ தேர்வு செய்யலாம். காற்றை சுத்திகரிப்பதில் இதற்கு பெரும் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இது வீட்டின் அழகையும் கூட்டுகிறது.
5/6
ஸ்நேக் ப்ளான்ட் (Snake Plant): காற்றில் இருந்து தீங்கு விளைவிக்கும் வாயுக்களை அகற்ற இந்த செடி பயன்படுகிறது. இந்த செடியின் வளர்ச்சிக்கு அதிகப்படியான சூரிய வெளிச்சம் தேவை இல்லை என்பதால், உங்கள் படுக்கையறையில் வைத்து வளர்ப்பதற்கு ஏற்றது.
6/6
லக்கி பேம்பூ (Lucky Bamboo): மூங்கில் செடிகள் யாருக்கெல்லாம் பிடிக்குமோ, அவர்கள் எல்லோரும் இதனை விரும்புவார்கள். இயற்கையாகவே, ஒரு இதமான சூழலை அமைக்கும் ஆற்றல் இந்த செடிக்கு இருக்கிறது. இதன் காரணங்களினால், இது போன்ற செடிகளை நமது படுக்கை அறையில் வைக்கும் போது நம்முடைய தூக்கம் மேம்படும் என்று நம்பப்படுகிறது.