/indian-express-tamil/media/media_files/2025/08/21/screenshot-2025-08-21-204429-1-2025-08-21-20-45-41.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/08/21/screenshot-2025-08-21-204436-2025-08-21-20-45-53.png)
முன்னோர்கள் நேரடியாக பசும்பால் பயன்படுத்திய நேரம் போயிற்று. இப்போது பல வகை பாக்கெட் பால் வசதியாகக் கிடைக்கிறது. ஆனால், ஸ்கிம்டு, டோன்ட் போன்ற பதங்களைப் பலர் புரிந்துகொள்ளாமல் நாள்தோறும் பயன்படுத்துகிறோம்.
/indian-express-tamil/media/media_files/2025/08/21/screenshot-2025-08-21-204446-2025-08-21-20-45-53.png)
ஸ்கிம்டு, டோன்ட்டு போன்ற வார்த்தைகள் அதில் உள்ள கொழுப்புச் சத்தின் அடிப்படையிலும், சில சமயங்களில் அதில் கலக்கப்படும் வைட்டமின், மினரல்கள் மற்றும் பதப்படுத்திகள் தொடர்பாக வகைப்படுத்தப்படுகின்றன.
/indian-express-tamil/media/media_files/2025/08/21/screenshot-2025-08-21-204507-2025-08-21-20-45-53.png)
ஃபுல் க்ரீம் மில்க் அல்லது ஹோல் க்ரீம் மில்க்
இதில் ஆறு சதவிகித கொழுப்பு சத்து இருக்கும். இது பால் அருந்தும் சிறு குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. பெரியவர்களுக்கு இது அவசியம் இல்லை. நாம் உண்ணும் உணவிலேயே நமக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் உள்ளதால் பெரியவர்களுக்கு இந்தப் பால் தேவைப்படாது.
/indian-express-tamil/media/media_files/2025/08/21/screenshot-2025-08-21-204515-2025-08-21-20-45-53.png)
டோன்ட் மில்க்
டோன்ட் மில்க் என்பது பெரும்பாலானோர் பயன்படுத்தும், 3-3.5% கொழுப்புச் சத்து கொண்ட பால். இது அனைத்து பயன்பாடுகளுக்கும் ஏற்றது.
/indian-express-tamil/media/media_files/2025/08/21/screenshot-2025-08-21-204429-1-2025-08-21-20-45-41.jpg)
ஸ்டாண்டரைஸ்டு மில்க்
ஸ்டாண்டரைஸ்டு மில்க்: இதில் 4.5 சதவிகிதக் கொழுப்புச் சத்து இருக்கும். வீட்டில் உள்ள அனைவருக்கும் இது ஏற்றது. அனைத்து வயதினரும் இதைப் பருகலாம்.
/indian-express-tamil/media/media_files/2024/10/24/2RVFM8jzdLDqYrtpB9i5.jpg)
டபுள் டோண்ட்டு மில்க்
டபுள் டோண்ட்டு மில்க்: இதில் கொழுப்புச் சத்து குறைக்கப்பட்டு இருக்கும். பலரும் இதனை ஸ்கிம்டு மில்க் உடன் குழப்பிக் கொள்வர். இருந்தாலும் இது முழுமையாக கொழுப்பு நீக்கப்பட்டது அல்ல என்கின்றனர் பலரும்.
/indian-express-tamil/media/media_files/2024/10/24/3pcdamw5wzyr7N3cLjvw.jpg)
ஸ்கிம்டு மில்க்
ஸ்கிம்டு மில்க்: இந்த வகை பாலில்தான் கொழுப்புச் சத்து முழுமையாக நீக்கப்பட்டிருக்கும். நூறு சதவிகிதம் முழுமையாக கொழுப்பு நீக்கப்பட்டால்தான் அது ஸ்கிம்டு மில்க் எனப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள், செரிமானப் பிரச்னை உள்ளவர்கள் இந்த வகை பாலைப் பயன்படுத்தலாம்.
/indian-express-tamil/media/media_files/smkcYJZlpejVaBXZy8uB.jpg)
பல வகையான பாலை நாம் நோக்கத்திற்கேற்ப தேர்வு செய்து பயன்படுத்தி, ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.