நரம்பு சுருட்டல்... அதுவும் உடலின் 2-வது இதயத்தில்; இந்தக் கீரையில் காபி குடிங்க போதும்: டாக்டர் மாரி ராஜ் டிப்ஸ்
வீட்டு வைத்திய முறைகளை தொடர்ச்சியாக பின்பற்றி, சரியான வகையில் நடைபயிற்சி மற்றும் உடல் உழைப்பு இருக்கும் போது நரம்பு சுருட்டல் பிரச்சனையை தடுக்கலாம் என்று அறிய முடிகிறது.
வீட்டு வைத்திய முறைகளை தொடர்ச்சியாக பின்பற்றி, சரியான வகையில் நடைபயிற்சி மற்றும் உடல் உழைப்பு இருக்கும் போது நரம்பு சுருட்டல் பிரச்சனையை தடுக்கலாம் என்று அறிய முடிகிறது.
பொதுவாக, கால்களை இரண்டாவது இதயம் என்று கூறுவதாக மருத்துவர் மாரி ராஜ் தெரிவித்துள்ளார். அதன் செயல்பாடுகள் சீராக இருப்பதன் மூலம் நரம்பு சுருட்டல் பிரச்சனையை தவிர்க்க முடியும். இதனால் தான் சரியான அளவில் நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
2/5
நரம்பு சுருட்டல் பிரச்சனையை குணப்படுத்துவதற்கு முக்கியமான பொருளாக மஞ்சள் விளங்குகிறது என்று மருத்துவர் மாரி ராஜ் கூறுகிறார். அந்த வகையில், மஞ்சள் மற்றும் கற்றாழை ஜெல் ஆகியவற்றை சேர்த்து கலந்து, நரம்பு சுருட்டு பிரச்சனை இருக்கும் இடங்களில் தடவலாம்.
3/5
இது தவிர, நரம்பு சுருட்டல் பிரச்சனைக்கு உலக அளவில் வல்லாரையை ஒரு மருந்தாக பயன்படுத்துகின்றனர் என்று மருத்துவர் மாரி ராஜ் தெரிவித்துள்ளார். அதன்படி, வல்லாரையை சுத்தப்படுத்தி பாலில் வேகவைத்து எடுத்துக் கொள்ளலாம்.
Advertisment
4/5
இதனை காயவைத்து அதன் பின்னர், கொத்தமல்லியுடன் சேர்த்து காபி போன்று போட்டுக் குடிக்கலாம் என்று மருத்துவர் மாரி ராஜ் பரிந்துரைக்கிறார். இதனை சாதாரண காபி மற்றும் டீ-க்கு மாற்றாக பயன்படுத்தலாம். இரத்தக் குழாய்களை விரிவடையை செய்யும் தன்மை வல்லாரையில் இருப்பதாக கூறப்படுகிறது.
5/5
இது போன்ற வீட்டு வைத்திய முறைகளை தொடர்ச்சியாக பின்பற்றி, சரியான வகையில் நடைபயிற்சி மற்றும் உடல் உழைப்பு இருக்கும் போது நரம்பு சுருட்டல் பிரச்சனையை தடுக்கலாம் என்று அறிய முடிகிறது.