முதலில் நாம் செய்ய வேண்டியவை, காலையில் எழுந்தவுடன் காபி மட்டுமே குடிக்காமல் ஒரு கப் வெதுவெதுப்பான தண்ணீரில் அரை தேய்க்கரண்டி தேனும், ஒரு எலுமிச்சையும் பிழிந்து அதை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
அதர்க்கு பிறகு உண்ணும் காலை உணவில் சிவப்பு அரிசி அவள், நிறைய்ய பழங்கள், சிறுதானியங்கள் ஏதாவது வகையில் எடுத்துக்கொள்ளலாம்.
காலை உணவு என்றாலே நன்றாக ஆவியில் வெந்த உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளவும். உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கொஞ்சமாக கார்போஹைட்ரெட்ஸ் எடுத்து கொண்டு நிறைய பழங்களை எடுத்துக்கொள்ளவும்.
ஒரு 11 மணி அளவில் ஒரு கிறீன் டீயை குடிக்கலாம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அதில் இனிப்பு சேர்க்காமல் குடிக்க வேண்டும். மதிய உணவிற்ற்கு முன்னாள் கொஞ்சம் வெந்தயம் சாப்பிடலாம். வெந்தயம் உங்கள் இரத்தத்தில் உள்ள கொழுப்புகளை சுலபமாக கரைத்து விடும்.
மதிய உணவிற்கும் காலை உணவை போல் கார்போஹைட்ரெட்ச்சான ரைஸை குறைவாக தட்டில் போட்டு, அதை விட இரண்டு மடங்கு அதிகமாக காய்கறிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் காய்கறிகளையே சாப்பிட்டு முடிக்க வேண்டும். சாப்பிட்ட பிறகு நிறைய மோர் அல்லாது ரசம் குடிக்க வேண்டும்.
மாலை வேளையில் ஒரு கிறீன் டீயை குடித்து விட்டு சுண்டல் மாதிரியான சிற்றுண்டிகளை எடுத்துக்கொள்ளலாம். இது இரவு நேர பசியை கொஞ்சம் குறைக்கும். அதற்க்கு பிறகு இரவு நேரம் சாப்பிடும் பொது சிறுதானியங்கள் அல்லது எண்ணைய் சத்து இல்லாத உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
பிறகு வாரத்தில் ஒரு நாள் வெறும் பழங்கள் மட்டுமே அந்த நாள் முழுவதும் சாப்பிடலாம். இது உங்கள் உடலில் உள்ள நச்சுகளை நீக்க உதவும்.
இப்படி ஓரு உணவு பழக்கத்தை நீங்கள் கொண்டு வந்தால் நிச்சயம் ஒரு 6 மாத காலத்தில் பத்திலிருந்து பன்னிரெண்டு கிலோ வரைக்கும் குறையும் என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.