/indian-express-tamil/media/media_files/2025/03/20/CLHDBkLnEcJdVqOkwbF5.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/01/23/sMFglsnWKJW9AMM49QFj.jpg)
கொய்யாவில் ஏராளமான நன்மைகள் உள்ளது. சர்க்கரை முதல் புற்றுநோய் வரை பாதிப்பு வராமல் தடுக்க கூடிய சத்து உள்ளது என சித்த மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார். நாட்டு சிவப்பு கொய்யா மிகவும் சிறப்பானது. சிவப்பு நிற கொய்யா சிறப்பானது ஏன் என்றால் அந்த கொய்யாவில் உள்ள சிவப்பு நிறம் லைகோபின் என்ற சத்து உள்ளது.
/indian-express-tamil/media/media_files/Ls8wYFcdkKjCyU1f1Fyz.jpg)
இது பல நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. குறிப்பாக சர்க்கரை நோய், இதய நோய், ரத்தக் கொதிப்பு வராமல் பாதுகாக்க உதவுகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Guava.jpg)
எல்லா பழங்களும் நோய் வராமல் தடுக்க உதவுகிறது. நோய் வந்தபின் உணவுகளை சரியாக சாப்பிடுவதை காட்டிலும் தினமும் காய், பழங்கள் சாப்பிடுவது நல்லது. தினசரி கொய்யா அல்லது பப்பாளி போன்ற பழங்களை காலை உணவின் போது சாப்பிடுவது நல்லது. குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் ஆக கொடுக்கலாம்.
/indian-express-tamil/media/media_files/2024/11/20/PFaLUUtvTpY4ygxDMHX2.jpg)
சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது, ஏனெனில் இதில் வெள்ளை கொய்யாவை விட குறைவான சர்க்கரை உள்ளது, இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், சிவப்பு கொய்யாவில் ஏராளமான நீர் மற்றும் நார்ச்சத்து உள்ளது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
/tamil-ie/media/media_files/uploads/2021/03/GettyImages-guava-leaves_759.jpg)
தொடர்ந்து சிவப்பு கொய்யா சாப்பிட்டு வர பாரம்பரியமாக உள்ள சர்க்கரை நோயையும் தடுக்க முடியும். அதோடு இந்த பழம் புற்றுநோய் பாதிப்பையும் தடுக்கிறது என அவர் கூறினார்.
/tamil-ie/media/media_files/uploads/2017/11/M_Id_255299_Guava.jpg)
புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. சிவப்பு கொய்யாவில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது, இது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2022/09/white-pink-guava_200_getty-wikimedia-commons.jpg)
இது தவிர, நார்ச்சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்களும் இதில் காணப்படுகின்றன, இது இரத்த அழுத்தம் தொடர்பான பிற அறிகுறிகளைக் கட்டுப்படுத்த உதவும் என்று மருத்துவர் கூறுகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.