முருங்கை கீரை பிரட்டல், கீரை சூப், முருங்கை பூ சேர்த்த பால், முருங்கை இளம்பிஞ்சு சேர்த்த பருப்பு, நெய் கூட்டு, முருங்கைக்காய் சாம்பார், கூட்டு, புளிக்குழம்பு என்று பல வகைகளில் நம் உணவில் முருங்கையை சேர்த்துக் கொள்ளலாம். ஆயுர்வேத மருத்துவத்தில் முருங்கை பிசினும் கூட பயன்படுத்தப்படுகிறது.