சிறுதானியம் என்று சொல்லப்படுகிற, திணை, கம்பு, ராகி, சோளம், குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் எல்லா நாடுகளிலும் கிடைக்கக்கூடிய அளவில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக, திணை அரிசி, வரகு அரிசி இரண்டும் சர்க்கரை நோய்க்கான ஒரு சிறப்பான தானியங்கள்.இதில் என்ன சிறப்பு என்றால், நிறைய கனிமச் சத்துக்கள் இருக்கும், சர்க்கரையை வேகமாக ரத்தத்தில் கலக்க விடாத, குறைந்த கிளைசெமிக் தன்மை இந்த தானியங்களில் உண்டு.