இன்சுலின் எதிர்ப்பு... நம் உடலில் உள்ள செல்கள் போதுமான அளவு இன்சுலின் விளைவுகளுக்கு ஒத்துழைக்காத போது இன்சுலின் எதிர்ப்பு உண்டாகிறது. இதற்கும் ட்ரான்ஸ் கொழுப்பிற்கும் நெருங்கிய தொடர்புள்ளது. இன்சுலின் எதிர்ப்பு காரணமாக நமது சர்க்கரை அளவு உயர்ந்து டைப்-2 டயாபடீஸ் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. அறிவாற்றல் செயல்பாடை பாதிக்கும்... ட்ரான்ஸ் கொழுப்பு உட்கொள்வதற்கும் அறிவாற்றல் குறைபாடுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. அதிகமான ட்ரான்ஸ் கொழுப்பை எடுத்துக்கொள்ளும் போது டிமென்ஷியா, அல்சைமர் போன்ற நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது.