/indian-express-tamil/media/media_files/2025/07/01/dulquer-salmaan-childhood-photos-tamil-news-2025-07-01-21-10-52.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/01/dulquer-salmaan-childhood-photos-tamil-news-2025-07-01-21-10-52.jpg)
சமீப காலமாக சமூக வலைதளங்களில் முன்னணி நடிகர், நடிகைகளின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த வகையில், தற்போது சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வரும் புகைப்படங்களுள் இந்தப் படமும் ஒன்று.
/indian-express-tamil/media/media_files/2025/07/01/dulquer-salmaan-childhood-photos-tamil-news-2025-07-01-21-15-36.jpg)
இந்தப் படத்தில் இருக்கும் அந்த சிறுவன் மலையாள சினிமாவின் டாப் நடிகரான மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான். இவர் தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/01/dulquer-salmaan-childhood-photos-tamil-news-2025-07-01-21-22-18.jpg)
துல்கர் சல்மான் கடந்த 2012 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான செகண்ட் ஷோ திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் துல்கர் சல்மான். அதனைத் தொடர்ந்து தீவரம் மற்றும் பட்டம் போலே போன்ற படங்களில் நடித்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/01/dulquer-salmaan-childhood-photos-tamil-news-2025-07-01-21-23-56.jpg)
துல்கர் சல்மான் தமிழில் வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி, சோலோ, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஏய் சினாமிகா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக, 2020 இல் தமிழில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம் தான் தமிழ் சினிமாவிற்கு இவரை நன்கு பரிட்சையமாக்கியது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் குவிந்தன.
/indian-express-tamil/media/media_files/2025/07/01/dulquer-salmaan-childhood-photos-tamil-news-2025-07-01-21-28-50.jpg)
சீதா ராமம் மற்றும் லக்கி பாஸ்கர் போன்ற படங்கள் பல மொழிகளில் வெளியாகி துல்கர் சல்மானுக்கு ஹிட் கொடுத்த நிலையில், அவர் தற்போது 'காந்தா' படத்தில் நடித்து வருகிறார். இப்படமும் பல மொழிகளில் உருவாகி வரும் நிலையில், இப்படத்தை தெலுங்கு நடிகர் ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா நிறுவனத்துடன் இணைந்து துல்கர் சல்மானின் வேபேரர் நிறுவனம் தயாரிக்கிறது.
/indian-express-tamil/media/media_files/2025/07/01/dulquer-salmaan-childhood-photos-tamil-news-2025-07-01-21-29-25.jpg)
துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்க நாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி நடிக்கின்றனர். படத்தை ‛ஹன்ட் ஆப் வீரப்பன்' என்ற வெப் தொடரின் கதையாசிரியராக பணியாற்றிய செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/01/dulquer-salmaan-childhood-photos-tamil-news-2025-07-01-21-29-59.jpg)
இந்த படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இதே தேதியில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'மதராஸி' படம் வெளியாவதாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
/indian-express-tamil/media/media_files/2025/07/01/dulquer-salmaan-childhood-photos-tamil-news-2025-07-01-21-31-22.jpg)
இந்நிலையில், நடிகர் துல்கர் சல்மானின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.