கொஞ்சம் பெருங்காயத் தூள், உப்பு... வீட்டுல அரிசி கெட்டுப் போகாம இருக்க இதை ட்ரை பண்ணுங்க!
அரிசி கெட்டுப் போகாமல் இருப்பதற்கு நாம் கையாள வேண்டிய சிம்பிள் டிப்ஸ் குறித்து இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதனை வீட்டில் இருக்கும் பொருட்கள் கொண்டு நம்மால் சுலபமாக செய்ய முடியும்.
நம் எல்லோர் வீட்டிலும் மளிகை பொருட்கள் வாங்கும் போது, அதில் பிரதானமாக இடம்பெறுவது அரிசியாக தான் இருக்கும். அந்த வகையில், குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசியை வாங்கி வீட்டில் ஸ்டோர் செய்து வைத்து விடுவோம்.
2/4
ஆனால், அரிசியை மொத்தமாக வாங்கி வீட்டில் வைக்கும் போது அவை கெட்டுப்போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதனை செய்வதற்கு நமக்கு பிரதானமாக தேவைப்படுவது பெருங்காயத்தூள் மற்றும் உப்பு. இதற்கான செய்முறையை தற்போது பார்க்கலாம்.
3/4
ஒரு டிஷ்யூ பேப்பரில் சுமார் ஒரு டீஸ்பூன் அளவிற்கு பெருங்காயத்தூளை கொட்டி, அதனை நன்றாக பரப்பி விட வேண்டும். இதே டிஷ்யூ பேப்பரில் சிறிதளவு தூள் உப்பும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டையும் நன்றாக சேர்த்து கலக்க வேண்டும்.
Advertisment
4/4
இறுதியாக, இந்த டிஷ்யூ பேப்பரை ஒரு ரப்பர் பேண்ட் போட்டு அரிசி இருக்கும் பாத்திரத்திற்குள் வைத்து விடலாம். இவ்வாறு செய்தால் எத்தனை நாட்கள் ஆனாலும் அரிசி கெட்டுப் போகாமல் இருக்கும்.