மலையாள திரையுலகில் அறிமுகமாகி, தமிழில் முன்னணி நடிகையாக ஒரு ரவுண்ட் வந்தவர் நடிகை கௌசல்யா. இவர், 1996 கால கட்டங்களில் மலையாள படங்களில் அறிமுகமாகி, தமிழில் காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படத்தின் மூலமாக பெரிதும் கவனிக்கப்பட்டார்.
தமிழ், மலையாளம் என 40க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். பூவேலி என்ற படத்தில் நடித்த கௌசல்யா, சிறந்த நடிகை, பிலிம்பேர் விருதுகளை வென்றார்.
நேருக்கு நேர் படத்தில் இவர் அகிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் வானத்தை போல, ஏழையின் சிரிப்பில் உள்ளிட்ட படங்களில் பிரபுதேவா உடன் இணைந்து நடித்தார்.
குபேரன் படத்தில் கார்த்திக் உடன் நடித்தார். இவரின் இயற்பெயர் கவிதா ஆகும். நடிகர் விஜய் உடன் கதாநாயகியாக, அண்ணியாகவும் நடித்துள்ளார். இந்நிலையில் தனது சினிமா வாழ்க்கை குறித்து மனம் திறந்த கெளசல்யா, “நான் இயக்குனர் தங்கர் பச்சான் படத்தில் நடித்த போது அவர் சொன்னதை என்னால் சரியாக செய்ய முடியவில்லை.
உடனே அவர் என்னை திட்டிவிட்டார். குரங்கு போன்ற முகத்தை வைத்துக்கொண்டு எனத் திட்டினார். அது எனக்கு கஷ்டமாக இருந்தது. ஆனாலும் நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இயக்குனர் திட்டும்போது தான் ஒரு பயம் வரும். அந்தப் பயம் வந்தால் நாம் நமது பணியை சிறப்பாக செய்ய முடியும்” என்றார்.
தொடர்ந்து, நடிகர் விஜய் குறித்து பேசுகையில் அவர் டயலாக்கை சப்தமாக பேசி பயிற்சி செய்வார். நான் மனதுக்குள்ளேயே டயலாக் பேசி பயிற்சி செய்வேன். ஒருகட்டத்தில் அதையும் மாற்றிக் கொண்டேன்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“