/indian-express-tamil/media/media_files/2025/05/19/qFE8jvBSXZawNlSC1FOO.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/05/19/actress-sukumari9-766471.jpg)
தனது 10 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 2500 படங்களுக்கு மேல் நடித்து, 9 மொழிகளில் தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்திய ஒரு நடிகை தனது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மரணமடைந்தார். அவர் தான் நடிகை சுகுமாரி.
/indian-express-tamil/media/media_files/2025/05/19/actress-sukumari6-320039.jpg)
தனது பெற்றோர்கள் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும், தமிழகத்தில் நாகர்கோவில் பகுதியில் 1940-ம் ஆண்டு பிறந்தவர் தான் சுகுமாரி. 7 வயதில் நடனம் கற்றுக்கொண்ட இவர், இந்தியா மட்டுமல்லாமல், அமெரிக்க, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/05/19/actress-sukumari5-621232.jpg)
அறிஞர் அண்ணா கதை வசனம் எழுதி 1951-ம் ஆண்டு வெளியான ஓர் இரவு படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சுகுமாரி, எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட நடிகர்கள் தொடங்கி, தற்போது தனது கடைசி படத்தில் நடித்து வரும் விஜய் உட்பட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/05/19/actress-sukumari7-482247.jpg)
தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம், ஆங்கிலம், பெங்காலி, ப்ரெஞ்ச் உள்ளிட்ட 9 மொழிகளில் 2500-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சுகுமாரி, தென்னிந்திய சினிமாவில் மோகன்லால், கமல்ஹாசன், மகேஷ்பாபு உள்ளிட்ட பலருடன் இணைந்து நடித்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/05/19/actress-sukumari8-276529.jpg)
காமெடி, வில்லி, குணச்சித்திரம் என அனைத்து கேரக்டர்களிலும் நடிப்பில் அசத்தியுள்ள நடிகை சுகுமாரி, 2003-ம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை பெற்றிருந்தார். நம்ம கிராமம் படத்திற்காக, 2010-ம் ஆண்டு, தேசிய விருதையும் வென்றுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/05/19/actress-sukumari2-293265.jpg)
கேரளா அரசின் மாநில விருதை 4 முறை வென்றுள்ள நடிகை சுகுமாரி, 1959-ம் ஆண்டு இயக்குனர் பீம்சிங்கை திருமணம் செய்துகொண்டார். 1978-ம் ஆண்டு பீம் சிங் இறந்த நிலையில், 38 வயதில் சுகுமாரி தனது கணவரை இழந்தார். அதன்பிறகு தனது சுரேஷ் பீம்சிங்கை வளர்த்து ஆளாக்கினார்.
/indian-express-tamil/media/media_files/2025/05/19/actress-sukumari4-835031.jpg)
ஒரு சில திரைப்படங்களில் நடித்த சுரேஷ் பீம்சிங், தற்போது மருத்துவராக பணியாற்றி வருகிறார்.வெள்ளித்திரை மட்டுமல்லாமல், சின்னத்திரையிலும் தனது முத்திரையை பதித்துள்ள நடிகை சுகுமாரி, நாடக குழுவுடன் இணைந்து 5000-க்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். 2009-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் படத்தில் அனுஷ்காவின் பாட்டியாக சுகுமாரி நடித்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/05/19/actress-sukumari3-540896.jpg)
வேட்டைக்காரன் படத்தில் அவரின் காமெடி காட்சிகள், அவருக்கும் விஜய்க்குமான காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. கடந்த 2013-ம் ஆண்டு தனது வீட்டில் விளக்கு ஏற்றும்போது திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த சுகுமாரி, 2013-ம் ஆண்டு மார்ச் 26-ந் தேதி மரணமடைந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.