நடிகர் ராணா டகுபதியும் தொழிலதிபர் மீஹீகா பஜாஜூம் வருகின்ற 8ம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் அவர்களின் திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் மற்றும் ப்ரீ-வெட்டிங் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள் இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஹால்தி மற்றும் மெஹந்தி விழாவின் புகைப்படங்களை பதிவிட்டு “வாழ்க்கை புன்னகையுடன் முன்னேறுகிறது” நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹூப்லி ஹில்ஸ் பகுதியில் அமைந்திருக்கும் மிஹீகாவின் இல்லத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. மஞ்சள் நிற லெகங்கா அணிந்து, சோழியில் ஆன நகைகளை அணிந்துள்ளார்.
மெஹந்தி நிகழ்விற்கு மீஹீகா பஜாஜ் பிங்க் நிற லெகங்காவை அணிந்திருக்கிறார்.
வருகின்ற 8ம் தேதி ராமநாய்டு ஸ்டுடியோவில் சனிக்கிழமை அன்று 30 விருந்தினர்களுடன் இந்த திருமண நிகழ்ச்சி நடைபெற உள்ளது.