சரவணன் மீனாட்சி
2011 காலகட்டங்களில் தமிழ் ரசிகர்களை கட்டிப் போட்ட ஒரு தொடர் சரவணன் மீனாட்சி. இந்தத் தொடரில் செந்தில் குமார் நாயகனாவும், ஸ்ரீஜா நாயகியாகவும் நடித்திருந்தனர்.
செந்தில் ஆரம்ப வாழ்க்கை
செந்திலின் பூர்விகம் சென்னை ஆகும். இவரின் பெற்றோர் கோவிந்தன்- பிரேமாவதி. செந்தில் சென்னை டான் போஸ்கோ கல்லூரியில் படிப்பை முடித்தவர்.
செந்தில் ஸ்ரீஜா காதல்
சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தபோது செந்திலும் ஸ்ரீஜாவும் காதல் வயப்பட்டனர்.
முதல் காதல்..
செந்தில்-ஸ்ரீஜா ஜோடியில் காதலை முதலில் வெளிப்படுத்தியது ஸ்ரீஜா தானாம்.
மேக்அப் துறந்த ஸ்ரீஜா
ஒருமுறை செந்தில் உன்னை எப்போதும் மேக் அப் உடனே பார்க்கிறேன். மேக்அப் இல்லாமல் பார்த்தால்தான் திருமணத்துக்கு சம்பதிப்பேன் எனக் கூற, ஸ்ரீஜா மேக்அப் இல்லாமல் வந்துள்ளார்.
திருமணம்
செந்தில் -ஸ்ரீஜா திருமணத்தை செந்தில் முறைப்படி அறிவித்தார். இது ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு இன்ப செய்தியாக அமைந்தது.
குழந்தை
செந்தில்-ஸ்ரீஜா தம்பதியர் தங்களது முதல் ஆண் குழந்தையை 2023ல் வரவேற்றனர். இந்தக் குழந்தைக்கு ஸ்ரீ வல்லவ் தேவ் என பெயர் சூட்டியுள்ளனர்.
சினிமாவில் செந்தில்
செந்தில் 2005ல் தவமாய் தவமிருந்து என்ற சேரன் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து, கண் பேசும் வார்த்தைகள், பப்பாளி, வெண்ணிலா வீடு, ரொம்ப நல்லவன் டா நீ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது சின்னத்திரை தொடர்களில் நடித்துவருகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.