/indian-express-tamil/media/media_files/2025/05/26/jYOBJ8yKqcBmWPfQPVdV.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/05/26/genelia-4-299697.jpg)
சினிமா ரசிகர்களுக்கு தங்களது அபிமான நட்சத்திரங்களின் குழந்தை பருவத்தை பற்றி தெரிந்து கொள்வது எப்போதுமே மகிழ்ச்சியான விஷயம். பிரபலங்களும் நம்மளைப் போன்ற சாதாரண மனிதர்கள் தான் என்பதை இது உணர்த்துகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/05/26/genelia-3-826358.jpg)
அந்த வகையில், தற்போது பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த ஒருவரின் குழந்தை பருவ புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
/indian-express-tamil/media/media_files/2025/05/26/genelia1-559719.jpg)
அந்த க்யூட்டான குழந்தை யார் என்று யூகிக்க முடிகிறதா? அவர் வேறு யாருமல்ல, ஜெனிலியா டி’சோசா தான்! வைரல் புகைப்படங்களில் அவர் தனது குடும்பத்தினருடன் மிகவும் அழகாக இருக்கிறார். முதல் புகைப்படத்தில், வெள்ளை நிற கவுனில் தனது தாயின் கைகளில் சிரித்த முகத்துடன் போஸ் கொடுக்கிறார் ஜெனிலியா.
/indian-express-tamil/media/media_files/2025/05/26/genelia-2-354304.jpg)
இரண்டாவது புகைப்படம் இன்னும் முந்தையது, அதில் தொப்பி அணிந்திருக்கும் ஜெனிலியாவை அவரது தாய் அன்புடன் பார்க்கிறார், அதே சந்தோஷமான சிரிப்பை இருவரும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/05/26/genelia-5-832995.jpg)
மற்ற புகைப்படங்களில், ஜெனிலியா தனது சகோதரர் நைஜல் டி’சோசாவுடன் இருக்கிறார். இருவரும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார்கள். ஒரு புகைப்படத்தில், சகோதரர்கள் இருவரும் தங்கள் தந்தையுடன் ஒரே மாதிரியான சிவப்பு நிற உடையில் காட்சியளிக்கின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2020/01/Genelia.jpg)
மற்றொரு புகைப்படத்தில், அவர்கள் இருவரும் தங்கள் தாயுடன் வெள்ளை நிற உடையில் இருக்கிறார்கள். ஜெனிலியா டி’சோசா தென்னிந்திய சினிமாவின் சிறந்த நடிகைகளில் ஒருவராக எப்போதும் கருதப்படுகிறார். கே. விஜய பாஸ்கர் இயக்கிய ‘துஜே மேரி கசம்’ என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/02/Genup.jpg)
இந்த படத்தில் ஜெனிலியாவுக்கு ஜோடியாக ரித்தேஷ் தேஷ்முக் நடித்திருந்தார், இது அவருக்கும் முதல் படமாகும். இந்த படம் 2003 ஜனவரி 3 ஆம் தேதி வெளியானது. பின்னாளில் ரித்தேஷ்தேஷ்முகை காதலித்து ஜெனிலியா திருமணம் செய்துகொண்டார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/02/New-Project-2020-02-06T180247.722.jpg)
ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ஜெனிலியா, அதன்பிறகு, விஜயுடன் சச்சின், பரத்துடன் சென்னை காதல், ஜெயம்ரவியின் சந்தோஷ் சுப்ரமணியம், தனுஷின் உத்தமபுத்திரன், விஜயின் வேலாயுதம் ஆகிய 6 படங்களில் நடித்துள்ளார். இதில் வேலாயுதம் படம் தான் அவர் நடித்த கடைசி தமிழ்படமாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.